கிரேஸியைக் கேளுங்கள்-கல்கி்

Author: Nagaraji.B /


கேள்வி - பதில்
* சி.ஆர்.நாகராஜன், பொள்ளாச்சி
நாகராஜன் கையில் கல்கி என முடியும்படியாக ஒருவெண்பா இயற்ற முடியுமா?
பூட்டிக் கிடந்த தன் வீட்டோட சாவியை....
வேட்டியில் வைத்து முடித்ததை Party யில்....
தாகசாந்தி யால்மறந்து தாளுடைந்தான் செங்கல் லால்....
நாகராஜன் கையில் கல் key.....!

* ஜி.ரெஜினா பானு, பழனி
தாங்கள் குதிரை சவாரி செய்ததுண்டா?
அடியேன் சினிமா சவாரி ஆரம்பித்தது இயக்குனர் சிகரத்தின் பொய்க்கால் குதிரையில்தான்!

* பா.அசோக், விருதுநகர்
காதலர்களுக்காக கட்டிய சின்னம் தாஜ்-மகால் கல்யாணம் ஆனவர்களுக்கு...?
கணவன்மார்கள் மனைவியை சரி (செய்யக்)கட்டும் 'தாஜா-மகால்'!

* எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்
மனிதனால் தாங்க முடியாத வலி எது....?
தாங்க முடியாதது எதுவுமே வலிதான். அது அன்புத் தொல்லையாக இருந்தாலும் சரி, அடக்கு முறையாக இருந்தாலும் சரி.. உறவு, வரவு இப்படி எதுவுமே அளவுக்கு மீறினால் அவஸ்தையாகும் வலிதான். இவ்வளவு ஏன், அளவுக்கு மீறினால் ஆரோக்கியமும் வலிதான். More gain more pain...மெல்லிய மயிலிறகு, அளவுக்கு அதிகமானால் பாரம் தாங்காமல் வண்டி வலிபொறுக்காது, அச்சை முறித்துக் கொள்ளும், இந்த வலியைத்தான் வள்ளுவர் பீலிபெய் சாகாடும் அச்சுறும் அப்பண்டம் சாலமிகுத்துப் pain என்றார்!

* எஸ்.மோகனசுந்தரி, கிருஷ்ணகிரி
முருகப் பெருமானிடம் உங்களுக்குப் பிடித்த குணம்?
குணங்களைக் கடந்த முருகப்பெருமான் நிர்க்குணம் வேண்டும் அடியார்கள் குறையை விரைவாகத் தீர்க்கும் முகம் ஆறுமுகம். சுட்ட பழமா? சுடாத பழமா? என்று கேள்வி கேட்டுப் பதிலாக ஞானத்தைQuick காக அளிப்பவன் Quick-Gun முருகன்.

* ஜி.முருகன், சேதுநாராயணபுரம்
இரவை விட இருட்டான ஒன்று ஏதேனும் உண்டா....?
பஞ்சமா பாதகம் செய்துவிட்டு பூனை போல சாதுவாக பேசாமல் கம்மென்றிருப்போர் கல் நெஞ்சு கம்மிருட்டு!

* எஸ்.விமலா, பிள்ளையார்குளம்.
விவாகரத்து என்பது விடுதலையா? தண்டனையா...?
சிலர் பெயிலில் மாமியார் வீட்டிலிருந்து ஜாலியாக வெளியே வந்திருக்கிறார்கள்!

* கோகிலா, சென்னை
ஏகாந்தம் பெற என்ன வழி?
A காந்தத்தை ஈர்க்க BE காந்தம்!

* மாதவி, சென்னை
எது அகந்தை...?
தான் என்னும் அகந்தை, அகம் தைக்கும் Thom....

* கோவிந்த், வேலூர்
சிறந்த விடை எது....?
பணி விடை!

* என்.பாலகிருஷ்ணன், மதுரை
பூனைக்குத் தோழனாகவும், பாலுக்குக் காவலனாகவும் இருக்க முடியுமா கிரேஸி?
ஏன் முடியாது? பால் (PALL) என்ற என் நண்பன் பூனேயில் (PUNE) போலீஸ் ஆஃபிஸராக இருக்கிறான். தோழன் பாலும் பார்க்கப் பூனை மாதிரி சாதுவாக இருப்பான். ஆக பூனேக்குக் காவலாக இருக்கும் பாலுக்கும் நான் தோழனாக இருக்கிறேன். பதில் ஒரு மாதிரி ஓ.கே.தானே!

* கே.எஸ்.கிருஷ்ணவேணி, கும்பகோணம்
எதிர்காலத்தில் பாட்டி வைத்தியம் என்பதே இல்லாமல் போய்விடுமோ என்று அச்சமாக உள்ளதே?
Forty ஆனாலே தலைக்கு டை அடித்து... ஜாலியாக, சுடிதார் அணியும் நாகரிகத்தைப் பார்த்தால், எனக்கென்னமோ எதிர்காலத்தில் பாட்டி என்பதே இல்லாமல் போய்விடும். போலிருக்கிறதே....!

* ஜி.ரெஜினா பானு, பழனி
ஸாரி பத்தினியின் ஆண்பால் என்ன?
ஏக பத்தினி விரதன்!

* லோ.மோகனசுந்தரி, கிருஷ்ணகிரி
தாய் தன் மகளுக்கு தர வேண்டிய சிறிந்த பரிசு எது?
பரிசம்

0 comments:

Post a Comment

Pages