கண்களைக் காக்கும் ஸ்பெஷல் சமையல்

Author: Nagaraji.B /

மூலிகை சமையல்
கண்களைக் காக்கும் ஸ்பெஷல் சமையல்
எஸ்.ஆர். கிஷோர் குமார்


''காந்த விழிகள், கவர்ச்சிப் பார்வை, மான் விழி, மயக்கும் கண்கள், குறுகுறுக்கும் இள¨மை வழியும் நயனங்கள்'' இப்படியெல்லாம் கதைகளில் வர்ணிக்கப்படும் கண்கள்.
''உனக்கு அளிக்கப்பட்ட இளமை கோட்டா ஓவர்'' என்று இவை டாட்டா காட்டி மறைந்து, வயது ஏறு முகமாகும்போது என்னவாகின்றன?
கண்களின் ஒளிகுன்றி, கண்ணின் கீழ் உப்பலான பை போன்ற வீக்கத்தாலும், சுருக்கங்களாலும் நிலைகுலைந்து வீழ்ந்து விடுகிறது. இந்த இளமை.
கண்களைச் சுற்றியுள்ள தசைகள் தளர்ந்த விடுவதால் டொக்கு விழுந்து விடும்நிலை. கண் புரை வளர்தல், ரெட்டினா விலகல், கிளாக்கோமா, வெள்ளெழுத்து போன்ற கண் குறைபாடுகள் வேறு அடுக்கடுக்காகத் தோன்றி இம்சைப் படுத்திவிடும்.
நாற்பது ஏன் முப்பதைக் கடந்த உடனேயே உணவில் கொஞ்சம் கவனம் செலுத்தினால், கண்பார்வையை முடிந்தவரை, சீராக வைத்துக் கொள்ளலாம்.
கண் பார்வையைக் கூர்மைப்படுத்தும் இயற்கை வரப்பிரசாதங்கள் எத்தனையோ! அதில் முதன்மை பெற்ற ஒரு சிறப்பான மூலிகையைக் காண்போம்.
பொன்னாங்கண்ணிக் கீரை
இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்கள் பொன்போல் ஆகிவிடுமாம். அதாவது பொன்னைப்போல போற்றிக் காக்க வேண்டிய கண்களுக்கு உகந்தது என பெரியோர் கூறுவர்.
பளபளக்கும் மேனியெழிலுக்கும், தெள்ளிய பார்வைக்கும் உகந்தது இந்தக் கீரை.
பொன்னாங்கண்ணி துவையல்
தேவையானவை:
ஆய்ந்த சுத்தம் செய்த பொன்னாங்கண்ணி இலைகள்: 1 கப்
தக்காளி துண்டுகள் - 2 மேஜைக் கரண்டி
மிளகு : 10
உப்பு : ருசிக்கேற்ப
தேங்காய் துருவல் : ஒரு மேஜைக் கரண்டி
நெய் : 1 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை : தாளிதம் செய்ய
செய்முறை:
சுத்தம் செய்த இலைகளைக் கழுவி ஈரம் போக காற்றாட வைக்கவும்.
வாணலியைச் சூடாக்கி நெய்யை உருக வைத்து அதில் மிளகாய் வறுத்து எடுக்கவும். தேங்காய்த் துருவலை லேசாக வறுத்து எடுக்கவும். தக்காளி மற்றும் இலைகளை வதக்கி எடுக்கவும்.
இலைகள், தேங்காய்த் துருவல், தக்காளி, மிளகு தேவையான உப்பு யாவையும் ஒன்றாக்கி சிறிது நீர் சேர்த்து மிக்ஸியில் துவையலாக அரைத்து எடுக்கவும். கண்டிப்பாக புளி சேர்க்கக்கூடாது.
தாளிதம் செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிலாம்.
'ஆராக்கிய மூலிகை சமையல்' நூலிலிருந்து...
புத்தகம் கிடைக்குமிடம்:
பிரேம் சாய் பப்ளிகேஷன்ஸ்
39/13 நாகப்பன் தெரு
புதுப்பேட்டை
சென்னை - 600 002
போன் - 98403-60797

0 comments:

Post a Comment

Pages