சத்தமில்லா சரித்திரம்

Author: Nagaraji.B /

அந்நியனிடம் அடிமைப்பட்டிருப்பதை நினைத்துக் கொந்தளித்து அலையலையாய்த் திரண்ட இடம் சென்னை மாநிலக் கல்லூரிக்கு எதிரே இருக்கும் திலகர் திடல். சீமைக்காரனுக்குச் சிம்மச் சொப்பனமாய் இருந்த சுப்ரமணி சிவாதான் இந்த இடத்துக்கு 'திலகர் திடல்' என்று பெயரிட்டார். திலக மாமுனிவர் இந்தியா சுதந்திரம் பெற தலைமை தாங்கிய மகாணாக திகழ்ந்து வந்தார். ஆகவே அவன் நினைவாக இந்த இடத்துக்கு திலகர் திடல் என்ற பெயரை பொறுத்தமாக சூட்டினார் சுப்ரமணிய சிவா.

ஆனால் நடந்தது என்ன? திலகர் திடலாக திகழ்ந்த இடம் நாளடைவில் அரசாங்க மாறுதல்களால் சீரணி அரங்கமாக மாறியது.

சுதந்திர வேள்வியை வளர்த்த இந்த மண்ணின் வீரியம் வீணாக வேண்டுமா? திலகரின் நாமம் என்றென்றும் இங்கே விளங்கவேண்டும் என்று உள்ளம் கொதித்து எழுந்தார். யார்? இன்றைய 'பாரத மணி' பத்திரிகை ஆசிரியர் திரு. பி.என்.சீனிவாசன்.

'திலகர் கட்டம்' என்கிற இந்த மண்ணின் பெயர் நிலைத்திருக்கவேண்டும். அதற்கு ஓர் நினைவுச் சின்னம் வேண்டும் என்று அரசிடம் அனுமதி கேட்டார்.

''சுதந்திரமா? போராட்டா? பழங்கதை!'' என்று பதிலளிக்காமலேயே ·பைலை மூடிவிட்டது அரசாங்கம்.

சீனிவாசனும் அவரது குழுவினரும் துடித்தனர் துவண்டனர். சிந்தித்தனர். செயல்பட்டனர்.

உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். வெற்றி பெற்றனர்.

விளைவாக உயர்நீதி மன்ற உத்தரவால் கல்வெட்டு ஒன்று 26-01-2010 குடியரசு தினத்தன்று கோலாகலமாய் ஆனால் சத்தமில்லாத ஒரு சரித்திரமாக திலகர் திடலிலே நாட்டப்பட்டுள்ளது.

அது கல்வெட்டா? அல்ல. தியாகப் பெருமக்களின் மங்களா சாசனம். விடுதலை வேள்வியின் சிம்மாசனம்.

0 comments:

Post a Comment

Pages