உங்கள் இதயக் கம்ப்யூட்டரில் புன்னகைப் பேரொளி

Author: Nagaraji.B /


உங்கள் இதயக் கம்ப்யூட்டரில் புன்னகைப் பேரொளி

தொழில்நுட்பத் துணைவன் நல்லது நண்பரே! நீங்கள் என்னிடமிருந்து என்ன உதவி கேட்க வந்துள்ளீர்கள்?




வாடிக்கையாளர் அன்பரே! மிகுந்த ஆலோசனைக்குப் பிறகு அன்பை எனக்குள் அமர்த்த முடிவு செய்துள்ளேன். அதற்கு என்னவழி என்று சொல்ல முடியுமா?




தொ.நு.து: ஓ.மிக நல்லது! நான் உமக்கு வழிகாட்டவியலும், நீங்கள் தயாரா?




வாடிக்: தயார்தான்...! ஆயினும், நான் தொழில்நுட்ப வகையில் தேர்ச்சி பெற்றவன் இல்லை. ஆனாலும் நான் தயார் என்றே தோன்றுகின்றது...! ஆம்! அன்பை எனக்குள்ளே அமர்த்துவதற்கு நான் முதலில் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்?




தொ.நு.து.: நீங்கள் அதற்கு முதலில் உங்கள் இருதயத்தை திறந்து வைக்க வேண்டும். ஆனால் அதற்கு முதலில் நீங்கள் உங்கள் இதயத்தைக் கண்டறிந்துள்ளீர்களா?




வாடிக் : ஆம்! ஆயினும் இப்போது இடையில் பல்வேறு திட்டச் செயல்பாடுகள்... அதாவது, புரோகிராம்கள் இருக்கின்றன. அவைகளிடையே அன்பை இடம் பொருத்துதல் சரிதானா?




தொ.நு.து : ஓ சரிதான்! ஆனால், அந்த மற்ற செயல்பாடுகள் என்னவென்று நீங்கள் எனக்குச் சொல்ல முடியுமா?




வாடிக் : கடந்த கால மனப்புண், இழிவான தற்பெருமை, குரோதம், வெறுப்பு, ஆகிய செயல்பாடுகள்தான் இப்போது என் இதயத்தில் செயலில் உள்ள.




தொ.நு.து.: அதனால் ஒன்றுமில்லை. நீங்கள் மேலே போகலாம். இன்று நடப்பிலுள்ள செயல் அமைப்பிலிருந்து கடந்தகால மனப்புண் என்ற அதை அன்பு வந்து மலர்ந்தே அழித்துவிடும். ஒருக்கால் அது உங்கள் நிரந்தர நினைவுத் தளத்தில் நீடிக்கவும் செய்யலாம். ஆயினும் இப்போது அது மற்ற செயல்பாடுகளைத் தடை செய்யாது.




அன்பு என்ற அந்த இனிய பொருள் தன்னுடைய அதே மதிப்புள்ள உயர்பெருமை என்ற ஒன்றின் மூலம் இழிந்த தற்பெருமை என்ற அதை இறுதியில் விலக்கிவிடும். நீங்கள், குரோதம், வெறுப்பு ஆகியவற்றை அதற்காக முற்றிலும் நீக்கிவிட வேண்டும். ஏனென்றால் இந்த இரண்டு செயல்பாடுகளும் அன்பு தகுந்த வழியில் உங்களுக்குள் மலராமல் தடுத்திடக் கூடியவைகள் ஆகும்.




ஆம்! இவற்றை உங்களால் ஒழித்துக் கட்டப்பட முடியுமா சொல்லுங்கள்?




வாடிக் : ம்ம்ம்....! பார்க்கலாம்! ஓ... ஊங்கஹும்! உண்மையில் இவற்றை நான் எப்படி நான் விலக்கி ஒழிப்பதென்று நீங்கள் வழிகாட்ட முடியுமா? தயவு செய்து இந்த உதவியைச் செய்யுங்கள்....!




தொ.நு.து: ரொம்ப சந்தோஷம்! உண்மையில் அது ரொம்ப சுலபம். உங்களுடைய ஸ்டார்ட் மெனு வைப் பாருங்கள்! மன்னிக்கும் மனப்பாக்ங்கு என்பதை நீங்கள் உங்களுக்குள் வரவழையுங்கள். குரோதம் முழுவதும் ஒழித்துக்கட்டப்படும் வரையில் எத்தனை முறைகள் இதைச் செய்ய வேண்டுமோ... அத்தனை முறைகள் நீங்கள் இதைச் செய்ய வேண்டும்.




வாடிக்: ஓக்கே! ஓக்கே! முடிந்தது! ஓ... அன்பு இப்போது தானாகவே மலரத் தொடங்கிவிட்டதே? இது இப்படித்தான் நிகழுமா?




தொ.நு.து.: உண்மைதான். ஆனால் இது முற்றிலும் அடித்தளச் செயல்பாடு என்பதை நீங்கள் உங்களது கவனத்தில் கொள்ள வேண்டும். ஆம்! இது முற்றிலும் அடிப்படையானது. ஆனால் நீங்கள் உயர்மதப்புகள் பெற வேண்டுமானால் நீங்கள் மற்ற இதயங்களுடன் இணைதலைத் தொடங்க வேண்டும்.




வாடிக்: அப்படியானால்... நான் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்?




ஒக்கே!... முடிந்தது! அட, இது ரொம்பக் கஷ்டமான வேலையாகவும் இல்லையே!




தொ.து.நு.: சுயசகிப்பை ஒழித்துக்கட்டுங்கள்! பின்வருகின்ற விவரங்களை நாடி, விசையைத் தட்டுங்கள். உங்கள் ஆன்மாவை நீங்கள் மன்னியுங்கள். உங்கள் மதிப்பை உணருங்கள்... உங்களது வரையறைகளை ஏற்றுக்கொள்ளுங்கள்!




வாடிக்: செய்துவிட்டேன். ஆஹா! இது அப்படி ஒன்றும் சிரமமான வேலையாய் இல்லையே?




தொ.நு.து.: இப்போது அவற்றை என் இதய டைரக்டரி என்ற ஒரே விவரஃபைலாக நகல் எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு இந்த அமைப்பு, எதிரான எந்த விவாக் குறிப்புகளையும் அழித்துவிடும். தன் குறியீட்டு வார்த்தையாய் எந்த ஒரு தவறான செயல்பாட்டையும் திருத்திவிடும். அதோடு ரொம்பத் தேவையற்ற அதிகமான வார்த்தைகளைக் கொண்ட சுயவிமர்சனத்தை எல்லா டைரக்டர்களிலிருந்தும் நீங்கள் ஒழிந்துவிட்டதா என்பதை அறிந்து கொள்வதற்கும் அது மீண்டும், வரவே வராது என்பதைத் தெரிந்து கொள்வதற்கும் கீஞுஞிதூஞிடூஞு ஆடிண ரீசைக்கிள் பின் என்ற உங்கள் குப்பைத் தொட்டியைக் காலி செய்ய வேண்டும்.




வாடிக் : ஆ! செய்துவிட்டேன்! செய்துவிட்டேன்! ஆஹா இப்போது என் இதயக் கணிணியில் புதிய உண்மைகள் பொங்கி வழிகின்றன. எனது மானிட்டரில் "புன்னகைப் புத்தொளி விளையாடத் தொடங்கிவிட்டது. அமைதியும், மனநிறைவும் என் இதயம் முற்றும் நகலாகப் பரந்து படர்ந்துவிட்டன. இது இயல்பானது தானே?




தொ.நு.து.: சில சமயங்களில்!... மற்ற வேளைகளில் இதற்கு ஒரு நேரம் பிடிக்கலாம். ஆனால், முடிவில் எல்லாம் தகுந்த நேரத்தில் முடிந்தாகியே தீரும். ஆக அன்பு மலர்ந்துவிட்டது. அத இதயத்தில் தொடர்ந்து செயல்படுகின்றது இல்லையா? நமது பேச்சு முடிவதற்கு முன் இன்னும் ஒரு வார்த்தை.




ஆம்! அன்பு இலவசமான பொருள். அதை மற்றவர்க்கு உறுதியாக அளியுங்கள். அதாவது, நீங்கள் சந்திக்கின்ற எல்லார்க்கும் அளியுங்கள். அதன் விளைவாக அவர்கள் அதை அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். உங்களுக்குச் சிறந்த அன்பின் சுவைகளைத் திரும்ப வழங்குவார்கள்.




வாடிக்: நன்றி உங்களுக்கு மிக மிக நன்றி!


0 comments:

Post a Comment

Pages