மூட்டு வலிக்கு முற்றுப்புள்ளி!

Author: Nagaraji.B /



உடலில் அனைத்து இயக்கங்களுக்கும் மடங்கி, விரிந்து ஒத்துழைக்கும் மூட்டுகளைப் பாதுகாத்துப் பராமரிப்பதற்கான டிப்ஸ்.

* உடல் எடையைத் தாங்குவதோடு அதிக உராய்வுகளுக்கும் ஆளாவது முழங்கால் மூட்டுகள்தான். எனவே அவை அதிக அளவில் பாதிப்புகளுக்கு உள்ளாகலாம்.



* அதிக உடல் எடைதான் பெரும்பாலான மூட்டு வலிகளுக்குக் காரணமாக இருக்கிறது. எனவே உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.



* மூட்டுக்கு வலு சேர்க்கும் குருத்து எலும்புகளில் உள்ள சில புரதங்கள் குறையும்போது அது மூட்டுக்களிலும் தேய்மானத்தை ஏற்படுத்தும்.



* சம்மணமிட்டு அமர்ந்து எழச் சிரமப்படுவது போன்ற மூட்டுவலிக்கான ஆரம்ப அறிகுறிகளின் போதே மூட்டுகளைப் பரிசோதித்து மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.



* மூட்டுவலியால் பாதிக்கப்பட்டவர்கள் தரையில் அமர்வதையும், படுப்பதையும் தவிர்ப்பது நல்லது.



* வலி நிவாரணிகள், பிசியோதெரபி போன்ற மருத்துவ முறைகளின் மூலம் மூட்டுவலியை எளிதில் குணப்படுத்தலாம்.



* தீவிர மூட்டுவலியில் இருந்து மீள முடியாதவர்கள் நவீன மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மூலம் நிரந்தரமான தீர்வு காணலாம்.



* மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு வலி இல்லாமல் வேகமாக நடக்கவும் படிக்கட்டுகள் ஏறி இறங்கவும் முடியும்.



* அதிகக் கொழுப்புச் சத்து உள்ள உணவுகளைத் தவிர்ப்பது, மூட்டுகளுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தாமல் இருக்கும்.



* அளவான உடல் எடை முறையான உடற்பயிற்சி போன்றவை மூலம் மூட்டுவலி வராமல் தற்காத்துக் கொள்வதுடன் மூட்டு தேய்மானத்தையும் தடுக்கலாம்.


0 comments:

Post a Comment

Pages