அகம், புறம், அந்தப்புரம்

Author: Nagaraji.B /

இந்திய சமஸ்தானங்களை நிராகரித்துவிட்டு இந்திய வரலாறைப் புரிந்துகொள்ள முடியாது.
மாட மாளிகை, கூட கோபுரம், பளிங்கு பிரதேசங்கள், பரவச நந்தவனங்கள், இந்தப் புறம் அந்தப்புரம், எந்தப் புறமும் எழில் கன்னிகைகள், எத்தனை எத்தனை இன்பமடா என்று வாழ்ந்து தீர்த்த இந்திய மகாராஜாக்கள் ஏராளம். பிரிட்டிஷாரிடம் இந்தியா அடிமைப்பட்டதற்கு முக்கியக் காரணமான இந்த ‘முந்தைய அத்தியாயம்’ ஒரு புதைபொருள். அதுவே இந்தப் புத்தகம்.

ஹைதராபாத், பரோடா, மைசூர், ஜெய்ப்பூர், காஷ்மீர், புதுக்கோட்டை, பாட்டியாலா, நபா, கபுர்தலா, இந்தூர், ஜோத்பூர், தோல்பூர், பரத்பூர், அல்வார், பஹவல்பூர், ஜுனாகத் உள்ளிட்ட அநேக முக்கிய சமஸ்தானங்கள் ஜொலிஜொலித்த கதை முதல் அழித்தொழிக்கப்பட்ட அரசியல் வரை இதில் விவரிக்கப்பட்டுள்ளது.

மகாராஜாவின் மணிமகுடத்தில் ஜொலித்த ரத்தினக்கல்லின் சிகப்புக்கும் அவரது சிம்மாசனத்தின் அடியில் சிதறிக்கிடந்த மக்களின் ரத்தத்துக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது. அதனால்தான், யாரங்கே என்று அதட்டும் மகாராஜாக்களின் வாழ்க்கை முறையை மட்டுமல்லாமல், வந்தேன் மன்னா என்று முதுகை வளைத்து ஓடிவரும் சேவகர்களின் வாழ்க்கையும் இதில் சொல்லப்பட்டிருக்கிறது.

முகலாயர்கள், செங்கிஸ்கான், யூதர்கள் ஆகிய வரலாற்று நூல்களை எழுதிய முகிலின் அடுத்த பிரம்மாண்டமான படைப்பு இது.

எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள்

Author: Nagaraji.B /

எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள்
சிறுகதை தொகுப்பு
நவீன தமிழ் சிறுகதையில் புதிய போக்குகளை உருவாக்கிய எஸ்.ராமகிருஷ்ணனின் முழுமையான சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. காலத்தால் புறக்கணிக்கப்பட்டு சாம்பல் படிந்து கிடக்கும் கிராமங்களையும் நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்தவர்களாக தனிமையும்
துயரமுமாக அலைவுறும் விளிம்பு நிலை மனிதர்களையும் எஸ்.ராமகிருஷ்ணன் படைப்புகள் எங்கும் காண முடிகிறது. கதை சொல்லலில் பல புதிய சாத்தியங்களை உருவாக்கும் இவரது மிகு புனைவும் கவித்துவ மொழியும் தமிழ்க் கதையாடலில் மிகத் தனித்துவமானது. ராமகிருஷ்ணனின் சிறுகதைகள் புதியதொரு தமிழ் புனைவியலை உருவாக்கு கின்றன என்பதே அதன் சிறப்பம்சம்.

பால்ய நதி

Author: Nagaraji.B /

பால்ய நதி
சிறுகதை தொகுப்பு
கதைகளிடமிருந்து தெரிந்து கொள்ள எவ்வளவோயிருக்கின்றது. பின்னிரவு நேரத்தின் நட்சத்திரங்களைப் போல எங்கோவொரு ஆழத்திலிருந்து கதைகள் மின்னிக்கொண்டிருக்கின்றன. இக்கதைகள் பெரிதும் நிலக்காட்சிகளின் மீது உருவாகியவை வெறுங்கையை மூடினாலும் திறந்தாலும் உள்ளே எதுவும் அற்று இருப்பது ஆச்சரியமில்லையா எனக்கொள்ளும் மன நிலையே இக்கதைகளை எழுதச் செய்திருக்கிறது.

வெயிலைக் கொண்டுவாருங்கள்

Author: Nagaraji.B /

வெயிலைக் கொண்டுவாருங்கள்
சிறுகதை தொகுப்பு
பாதரசத்தைப் போல எவர் கையிலும் வசப் படாமலும் சதா அழகு காட்டி உருண்டோடியபடியுமாய் இருக்கிறது கதை என்னும் அபூர்வ திரவம். அன்றாடப் பிரச்சினைகளே கதை என்னும் காலனியக் காமாலை எங்கும் நிரம்பி வழியும் சூழலில் கதை என்பது ஒர் அறிதல் முறையெனக் கொள்ளவும பின் நவீனப் புனைவியலுக்கான கதை மொழியை உருவாக்கவும் முனையும் இக்கதைகளை அதி கதைகள் என அழைக்கலாம். புலன் சார் புனைக் கதைகளாய் இருக்கும் இந்த Modern fables தமிழில் புதிய கதையாடலை உருவாக்க முனைகின்றன.

அத்தனைக்கும் ஆசைப்படு

Author: Nagaraji.B /

உங்களில் ஒரு நிச்சயமான ஆக்கப்பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறீர்களா? வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் ரசித்து வாழ விருப்பமா? எல்லாப் பொழுதையும் இனமையாக ஆனந்தமாக அனுபவிக்க வழி தேடுகின்றவரா? கடவுள் பற்றிய பழமையான எண்ணஞ்களிலிருந்து வெளிப்பட்டு என்றும் ஏற்றுக்கொள்ளத்தக்க புதிய நோக்கில் சிந்தனையில் காண விருப்பமா? சுருங்கக்கூறின் வாழ்க்கையின் அத்துணை பரிமாணங்களையும் ஆனந்தமாக வாழ்ந்திட வழிகாட்டுகிறது சத்குரு ஜக்கிவாசுதேவின் "அத்தனைக்கும் ஆசைப்படு" . ஆனந்தவிகடன் இதழில் தொடராக வெளியிடப்பட்டு தற்போது தனிப்புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது சுயவளர்ச்சி தொடர்பாக ஏராளமான புத்தகங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
இன்னும் சொல்லப்போனால் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இதன் விற்பனை தற்போது அதிகம் சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளது. காரணம் மனிதன் தற்போது தன்னை ஊக்குவிக்கும் உற்சாக மருந்தாக, வாழ்க்கைப்பற்றிய உண்மைத் திறவுகோலாக, வழிகாட்டுதலாக, வளர்ச்சிப் பாதையில் தன்னை முடுக்கும் உந்துசக்தியாக இம்மாதிரியான புத்தகங்களை கருதி ஏற்றுக்கொண்டிருப்பது தான்.

இத்தகைய புத்தகங்கள் பல வெளிவந்து கொண்டிருந்தாலும் அவையாவும் பிறர் கூறியவற்றை திருப்பிக்கூறும் எதிரொலியாகத்தான் இருக்கின்றன. மாற்று சிந்தனை,
புதியநோக்கு என்பதெல்லாம் இல்லாமல் முழுக்க முழுக்க செயற்கையாகத்தனமான புத்தகங்கள் தான் அதிகம் காணப்படுகின்றன.

"அத்தனைக்கும் ஆசைப்படு" மேற்கூறியவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. வாழ்க்கையை முழுமையாக ரசிக்கக் கற்றுத்தருவது.

துன்பத்திற்க்குக் காரணம் ஆசையா?
மகிழ்ச்சி என்பது என்ன?
பிரச்சனைகளை எதிர்கொள்வது எப்படி?
வெற்றியடைய என்ன செய்ய வேண்டும்?
வாழ்க்கையை நம் விருப்பப்படி அமைத்துக்
கொள்வது எப்படி?
மனப்பூர்வமாக செயாலாற்றுவது எப்படி?
வாஸ்து, ஜாதகம் இவையெல்லாம் உண்மையா?
கடவுள் என்பவர் யார்? அவர் எத்தகையவர்?

இப்படி ஏராளாமான விஷயங்களை ந்மக்கு தெளிவுபடுத்துவதோடு நம்மில் ஒரு நிச்சயமான மாற்றத்தை ஏற்படுத்துகிறது. வாழ்க்கையை ஒரு புதிய கோணத்தில் சந்திக்கவும், சிந்திக்கவும் செய்கிறது. "எதையும் ரசித்து ஈடுபாட்டுடனும், மனப்பூர்வமாகவும் செயலாற்றுவதினால் வெற்றி நிச்ச்யம் நம் வசமாகும்" என்னும் இப்புத்தகத்தை அனைவரும் வாழ்நாளில் ஒருமுறையாவது நிச்சயம் படித்திட வேண்டும்.


உடல் நலம்பெற உணவு முறை வைத்தியம்!

Author: Nagaraji.B /

ஒவ்வொரு காய்கறியிலும்,பழங்களிலும், தானியங்களிலும் உள்ள சத்துக்கள் யாவை, அதன் பயன் என்ன என்பதை விரிவாக கூறியுள்ளார் நூலாசிரியர். முதியோருக்கு உதவும் உணவு, நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நோய்க்கும் என்ன உணவு கொடுப்பது என்ற விவரமும் கொடுக்கப்பட்டுள்ளது.

60 அமெரிக்க நாட்கள்

Author: Nagaraji.B /

பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம்,11/29 சுப்ரமணியம் தெரு,அபிராமபுரம், சென்னை -18.

சுஜாதா தன் அமெரிக்க அனுபவங்களை எழுதும் இந்த நூல் ஒரு பயணக் கட்டுரை அல்ல. அமெரிக்க சமூக, கலாசார, அரசியல், பொருளியல் வாழ்க்கையினை சுஜாதா தனக்கே உரிய கூர்மையான பார்வையின் வழியாகச் சித்தரிக்கிறார். இந்த நூல் எழுதப்பட்ட காலத்தைத் தாண்டி அதன் ஆதார உண்மைகள் இன்றும் மாறாதவை. அமெரிக்கா என்ற கனவை விமர்சனபூர்வமாக எதிர்கொள்ளும் நூல் இது.

அமெரிக்கா போகணுமா?

Author: Nagaraji.B /

கிழக்குப் பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. (பக்கம்: 144). ரூ.60

அ அம்மா, ஆ ஆடு, இ இலை என்று அரிசுவடி கற்றுத்தருவது போல, பாஸ்போர்ட், விசாவில்
தொடங்கி, விமானத்துக்கு டிக்கெட் வாங்குவது, மூட்டை முடிச்சுகள் கட்டுவது, அமெரிக்காவில் வீடு தேடுவது, கார் வாங்குவது, இந்தியாவுக்குப் பணம் அனுப்புவது என்று அமெரிக்க வாழ்க்கையின் சகல
தேவைகளுக்கும் உற்ற உறுதுணைவனாக இந்தப் புத்தகம் இருக்கிறது.

யுவான் சுவாங் இந்தியப் பயணம்: முதல் தொகுதி

Author: Nagaraji.B /

புதுமைப்பித்தன் பதிப்பகம், 57, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக்நகர், சென்னை83. (பக்கம்: 256).


புனிதப் பயணியருள் பவுத்த சமயத்தின்பால் தீராத பற்றுக் கொண்ட கன்பூசியசை சிந்தனை மரபு வழித் தோன்றலான யுவான் சுவாங்கின் இந்தியப் பயணக் குறிப்புகள், பேரார்வத்தைத் தூண்டக்கடியவை. யுவான்சுவாங் 16 ஆண்டு காலம் பயணம் செய்து தாம் நேரில் கண்டவற்றையும், கேள்விப்பட்டவற்றையும் அக்கால சீனப் பேரரசர் தான் வேண்டு
கோளுக்கேற்ப சீன மொழியில் எழுதினார். இப்பயண நூலை தாமஸ் வாட்டெர்ஸ் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இரண்டையும் உள்ளடக்கமாகப் பெற்ற நூல் தமிழிலும் வர வேண்டும் என்று எழுந்த பேரவாவின் துவக்கமாக ஒரு பகுதியை முதல் தொகுதியாக நமது கைகளில் தவழ விட்டுள்ளனர் புதுமைப்பித்தன் பதிப்
பகத்தினர். இது இந்தியாவைப் பற்றிய யுவான்சுவாங் கருத்துக்களை அறிய உதவும்.

சென்னையிலிருந்து உலகை நோக்கி...

Author: Nagaraji.B /

நமக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்துவதுடன், பயிற்சியால் பல சாதனைகளைப் படைக்க முடியும் என்ற ஆணித்தரமான கருத்தைக் கொண்டிருப்பவர் ஆசிரியர். கடந்த பல ஆண்டுகளில் பல்வேறு தலைப்புகளில் ஆசிரியர் எழுதிய விஷயங்கள் இதில் அழகாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவிற்கு மன்மோகன் தலைமையிலான அரசு ஒரு புதிய தோற்றத்தை தந்திருக்கிறது என்பது உட்பட பல தகவல்கள் கொண்ட நூல்.


பதிப்பகம், 3/2, சுவாதிராம் டவர்ஸ், 3<, துர்கா பாய் தேஷ்முக் சாலை, இராஜா அண்ணாமலைபுரம், சென்னை-600028. (பக்கம் 220)

THE MIND OF RAMANA MAHARSHI , The Mind of Adi Shankaracharya

Author: Nagaraji.B /

‌‌வெளியீடு: 48. ஆர்யா கவுடர் ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை - 600 033.
தொலைபேசி: 044-2480 3091 / 3092 / 3093 / 3094.
இ-மெயில்: chennai.sales@jaicobooks.com

கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017.
தொலைப்பேசி : 24332682, 24338712.

எட்டயபுரமும் ஓஷோபுரமும்

Author: Nagaraji.B /

சாகித்ய அகடமி விருது பெற்ற கவிஞர் புவியரசுவின் அணிந்துரையுடன் ஆரம்பமாகும் இந்த நூலில், பாரதியாரின் பாஞ்சாலி சபதமும், ஓஷோவின் கிருஷ்ண பரமாத்மாவைப் பற்றிய பார்வையும் ஒப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. விரிவாக எழுதப்பட வேண்டிய இந்த ஒப்பாய்வை சுருக்கமாக ஆசிரியர் இந்த நூலில் எழுதியிருக்கிறார்.இதில் உள்ள தகவல்களைப் படிக்கையில், விரிவுபடுத்தப்பட வேண்டிய விஷயங்கள் உள்ளடக்கிய இந்த, "தலைப்பை மரபின் முத்தையா தமிழ் கூறும் நல்லுலகுக்கு பெரிய அளவில் வழங்க வேண்டும் என்று கேட்க வைக்கிறது.


திரிசக்தி பப்ளிகேஷன்ஸ், 56/21, முதல் அவென்யு, சாஸ்திரி நகர், அடையார், சென்னை-600 020. (பக்கம்:88)

பார​தி​யா​ரின் விஜயா சூரி​யோ​த​யம் இதழ்​கள்

Author: Nagaraji.B /

1909-1910 ஆண்​டு​க​ளில் பார​தி​யார் விஜயா,​​ சூரி​யோ​த​யம் ஆகிய இதழ்​க​ளில் எழு​திய தலை​யங்​கங்கள்,​​ நகைச்​சுவை கட்​டு​ரை​க​ளின் தொகுப்பு.​ அக்​கால கட்​டத்​தில் வெளி​வந்த செய்​தி​க​ளும் தொகுத்​துக் கொடுக்​கப்​பட்​டுள்​ளன.​ அக்​கால கல்வி,​​ அர​சி​யல்,​நாட​கம்,​​ பக்தி போன்ற பல விஷ​யங்​கள் பற்றி பார​தி​யார் தனக்​கே​யு​ரிய உயி​ரோட்​ட​மான நடை​யில் தலை​யங்​கங்கள் எழு​தி​யுள்​ளார்.​ பார​தி​யா​ரின் தீர​மிக்க சுதந்​திர உணர்​வை​யும் தேசப் பக்​தி​யை​யும் அவை நமக்​குக் காட்​டு​கின்​றன.​ இரண்டு இதழ்​க​ளி​லும் அந்​நா​ளில் வெளி​வந்​துள்ள செய்​தி​க​ளும் தொகுத்​துக் கொடுக்​கப்​பட்​டுள்​ளன.​ அன்​றைய நாட்டு நிகழ்​வு​களை நாம் தெரிந்து கொள்​வ​தற்கு இந்​நூல் உத​வு​கி​றது.​ மாபெ​ரும் கவி​ஞ​ரான பார​தி​யா​ரின் பன்​மு​கத்​தன்​மையை வெளிச்​ச​மிட்​டுக் காட்​டும் சிறந்த நூல்.​ அரிய தொகுப்பு.

உப்​புக் கணக்கு

Author: Nagaraji.B /





எழுத்​தா​ளர் வித்யா சுப்​ர​ம​ணி​யம் எழு​தி​யுள்ள "உப்​புக் கணக்கு' நாவலை வர​லாற்​றுப் புதி​னம் என்றோ சமூக நாவல் என்றோ முத்​திரை குத்​தி​விட முடி​யாது.​ உப்பு சத்​தி​யா​கி​ர​கத்​தில் தொடங்கி,​​ தேசப் பிரி​வி​னை​யின்​போது ஏற்​பட்ட வகுப்​புக் கல​வ​ரத்தை மைய​மாக வைத்து கதை பின்​னப்​பட்​டி​ருக்​கி​றது.​

உப்பு சத்​தி​யா​கி​ர​கம் பற்றி பள்​ளிக்​கூட பாடங்​க​ளில் இருப்​ப​தை​விட தெளி​வா​கவே சொல்​லப்​பட்​டி​ருக்​கி​றது.​ நாவ​லில் வரும் மாந்​தர்​க​ளின் தேச பக்​தி​யும் காந்​திஜி மீதான பற்​றும் கற்​ப​னையோ மிகையோ அல்ல என்​ப​தால் பல இடங்​க​ளில் நெகிழ்ச்சி ஏற்​ப​டு​கி​றது.​

திரைப்​ப​ட​மாக்​கத்​தக்க நல்ல கதை அமைப்பு.​ முதி​ய​வர்​கள்,​​ இளை​ய​வர்​கள் அனை​வ​ரை​யும் நிச்​ச​யம் ஈர்க்​கும் இந்த நாவல்.​ ராஜாஜி,​​ கல்கி சதா​சி​வம் உள்​ளிட்​டோ​ரின் பங்​கைத் தேவை​யான அள​வுக்கு நாவல் விவ​ரிக்​கி​றது.

ஆதி​வா​சி​க​ளின் குரல்

Author: Nagaraji.B /





இந்​திய அர​சி​யல் சாச​னத்​தில் குறிப்​பி​டப்​ப​டும் சமத்​து​வ​மும்,​​ பாகு​பா​டு​களி​லி​ருந்து பாது​காப்​பும் ஏட்​ட​ள​வி​லேயே உள்​ளன என்று கூறும் நூல்.​ தமி​ழ​கத்​தில் 9 மாவட்​டங்​க​ளில் ஆதி​வா​சி​கள் வாழும் பகு​தி​க​ளில் கள ஆய்வு செய்து எழு​தப்​பட்​டுள்ள நூலின் தமி​ழாக்​கம்.​

வளர்ச்​சித் திட்​டங்​கள் என்ற பெய​ரில் காடு​களை அழித்து ஆதி​வா​சி​களை அவர்​க​ளு​டைய சொந்த மண்ணி​லி​ருந்து விரட்​டும் முயற்​சி​களே அதி​க​மாக நடந்​துள்​ளன என்​றும்,​​ ஆதி​வா​சி​க​ளின் வாழ்க்​கையை மேம்​ப​டுத்​து​வ​தற்​கான ஆக்​கப்​பூர்​வ​மான திட்​டங்​களோ,​​ அர​சி​யல் உறு​திப்​பாடோ மத்​திய,​​ மாநில அர​சு​க​ளி​டம் இல்லை என்​றும் கூறும் நூல்.​


எவை இழப்புகள்?-அசோகமித்திரன்

Author: Nagaraji.B /





இலக்கியம்,​​ வரலாறு,​​ திரைப்படம்,​​ கவிதை,​​ அரசியல் போன்ற பல விஷயங்களைப் பற்றிய தனது பார்வைகளையும் அனுபவங்களையும் இந்நூலில் நூலாசிரியர் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.​ எந்த ஒரு பொருள் பற்றியும் மிக இயல்பாகவும்,​​ செயற்கைத்தனம் அறவே இல்லாமலும் சொல்லப்பட்ட அருமையான கட்டுரைகளின் தொகுப்பு.​ மணிரத்னம்,​​ பெர்க்மன்,​​ வசந்த்,​​ உ.வே.சாமிநாதையர்,​​ கவிஞர் ஞானக்கூத்தன்,​​ ஜெயகாந்தன்,​​ தியாகராஜ பாகவதர்,​​ ராமகிருஷ்ண பரம்ஹம்சர்,​​ ம.பொ.சி.,​​ புராணங்கள்,​​ திராவிட இயக்கம்,​​ இட ஒதுக்கீடு என பலதரப்பட்ட நபர்கள்,​​ விஷயங்கள் பற்றியெல்லாம் பேசும் சிறந்த கட்டுரைகளின் ​ தொகுப்பு.

கர்நாடக சங்கீதம்-​ ஓர் எளிய அறிமுகம்

Author: Nagaraji.B /




இசையைப் புரிந்து ரசிப்பதற்கும்,​​ இசையை முறையாக கற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்கும் பெரிதும் பயன்படும் நூல்.​ கர்நாடக இசையின் முக்கிய கூறுகள்,​​ மேற்கத்திய இசையும் ஹிந்துஸ்தானி இசையும் எப்படி கர்நாடக இசையிலிருந்து வேறுபடுகிறது?​ ராகம் என்றால் என்ன?​ என்பது போன்ற கேள்விகளுக்கு இந்நூலில் பதில்கள் உள்ளன.​ ஆரம்ப நிலையில் இசைப் பயிற்சி பெறும் மாணவர்களுக்கும் இசை நிகழ்ச்சிகளை நடத்தும் கலைஞர்களுக்கும் இந்நூலில் அரிய விஷயங்கள் உள்ளன.​ பின் இணைப்பாக சில மேளகர்த்தா ராகங்களின் ஜன்ய ராகங்களைக் கொடுத்திருப்பது இளங் கலைஞர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.

கர்நாடக சங்கீதம்-​ ஓர் எளிய அறிமுகம்;​ ​ பக்:96; ரூ.75;
கிழக்கு பதிப்பகம்,​​ 33/15,​ எல்டாம்ஸ் சாலை,​​ ஆழ்வார்பேட்டை,​​ சென்னை-​ 600 018.


சங்​க​கா​லத் தமி​ழ​க​மும் அதி​யர் மர​பி​ன​ரும்

Author: Nagaraji.B /






சங்​க​கா​லத் தமி​ழ​க​மும் அதி​யர் மர​பி​ன​ரும்-​த.பார்த்​தி​பன்;​ பக்.228; ரூ.120; விவே​கா​னந்தா கொடை மற்​றும் அறக்​கட்​டளை,​​ 5/1397,​ எல்.ஆர்.மாணிக்​கம் தெரு,​​ இரண்​டா​வது சந்து,​​ பார​தி​பு​ரம்,​​ இலக்​கி​யம்​பட்டி,​​ தர்​ம​புரி-​636 705.​ ​ ​ ​ ​ ​ ​ ​

தமி​ழக வர​லாற்​றில் அதி​யர்​கள் பேர​ரசு நிலை​யில் ​ இருந்​த​னர் என்​றும் அவர்​கள் வீழ்ச்சி அடைந்த காலமே சங்க காலம் என்​றும் கூறும் நூல்.​ சேர,​​ சோழ,​​ பாண்​டிய அர​சு​கள் தமி​ழக வர​லாற்​றில் முன்​னி​லைப்​ப​டுத்​தப்​பட்டு,​​ அதி​யர் வர​லாறு புறக்​க​ணிப்​பட்​டது என்​ப​தை​யும் அதி​யர்​க​ளின் வீழ்ச்சி சங்க காலத் தமி​ழ​கத்​தின் வீழ்ச்சி என்​ப​தை​யும் ​ பொருத்​த​மான தர​வு​க​ளோடு நிறுவி,​​ தமி​ழக வர​லாற்​றில் புதிய வெளிச்​சத்தைப் பரப்​பும் சிறந்த நூல்.

படித்​த​தில் பிடித்​தது: பிரிவு

Author: Nagaraji.B /

படித்​த​தில் பிடித்​தது: பிரிவு

​அபா நக​ரம் நில​ந​டுக்​கத்​தால் அழிந்​து​போன நாளில் ஒரு தாய் தன் மகன் மர​ண​ம​டை​வ​தைப் பார்த்​தாள்.​ அவ​ளால் அந்த மர​ணத்தை ஏற்​றுக்​கொள்ள முடி​ய​வில்லை.​

அவ​னைத் திருப்​பித் தரு​மாறு தெய்​வங்​க​ளி​டம் வேண்​டி​னாள்.​ கருணை கொண்ட தெய்​வங்​க​ளும் அந்​தக் குழந்​தை​யின் ஆன்​மாவை மறு உல​கத்​தில் நுழைய அனு​ம​திக்​கா​மல் மறு​ப​டி​யும் அதை அவ​னு​டைய உட​லி​லேயே புகுத்​தி​விட்​டன.​ ஆனால் தெய்​வங்​க​ளைப் பற்​றித்​தான் உங்​க​ளுக்​குத் தெரி​யுமே!​ அந்த உடல் இன்​ன​மும் செத்​துத்​தான் கிடக்​கி​றது.​

அதன் காயங்​கள் ஆற​வில்லை.​ மகன் திரும்​பக் கிடைத்​து​விட்ட சந்​தோ​ஷத்​தில் திளைத்த தாய்,​​ அது கஷ்​டப்​ப​டு​வ​தை​யும் துன்​பு​றுத்​தும் தனது சதைப்​பிண்​டத்​தின் கைதி​யா​கி​யி​ருப்​ப​தை​யும் கண்டு பீதி அடைந்​தாள்.​ அதன் பிற​கு​தான் அந்​தக் கொடுமை நிகழ்ந்​தது.​

குழந்தை அழ ஆரம்​பித்​தது.​ புழுக்​கள் அதன் மீது அப்​பிக்​கொண்டு அதன் உட​லுள் புகுந்​தன.​ அது சாவை வேண்டி அழு​தது.​ ஆனால்,​​ நான்​தான் சொல்​கி​றேனே,​​ அது ஏற்​கெ​னவே இறந்​து​போ​யி​ருந்​தது.​ நொந்​து​போன அந்​தத் தாய் அதைக் கத்​தி​யால் குத்​தி​னாள்.​

ஒரு​முறை,​​ இரண்டு முறை,​​ மூன்று முறை,​​ பல முறை.​ பிறகு பெரிய பாறை​க​ளால் தாக்​கி​னாள்.​ விஷத்​தைக் கொடுத்​தாள்.​ கழுத்தை நெரித்​தாள்.​ ஆனால் அந்​தக் குழந்தை வலி​யில் அழு​து​கொண்டே இருந்​தது.​ கடை​சி​யில் அந்​தத் தாய் தோல் கிழிந்த,​​ எலும்​பு​கள் உடைந்த,​​ இரத்​தம் உறைந்த அந்த உட​லைத் தூக்​கிக்​கொண்​டு​போய் நெருப்​பில் எறிந்​தாள்.​

பாவப்​பட்ட அந்​தக் குழந்​தை​யும் எரிந்து புகை​யா​க​வும் சாம்​ப​லா​க​வும் மாறி​யது.​ காற்று அதைச் சித​ற​டித்து வெளி​யெங்​கும் கலக்​கச் செய்​தது.​ அந்​தத் தாய் முடிந்த அளவு அவ​ளைத் தேற்​றிக்​கொண்​டாள்.​ ஆனால்,​​ அவள் அதைச் ​ செய்​தி​ருக்​கக் கூடாது.​

ஏனென்​றால் அந்​தக் குழந்​தை​யின் ஆன்மா கண்​ணுக்​குப் புலப்​ப​டாத அந்த எச்​சங்​க​ளின் வழி​யாக அலைந்​து​கொண்​டு​தான் இருக்​கி​றது.​ துய​ருற்ற அந்த ஆன்மா உல​கில் இன்​ன​மும் உயி​ரோ​டு​தான் இருக்​கி​றது.​ சுவா​சிக்​கும்​போ​தும்,​​ வாயைத் திறக்​கும்​போ​தும்,​​ நீங்​கள் அதை உணர்​கை​யில் திடீ​ரென்று ஒரு சோகம் உங்​கள் மீது கவி​யும்.​

​சிறு​க​தை​யா​சி​ரி​யர்:​ ஆல்​பெர்தோ சிம்​மல் ​(மெக்​சிகோ)​ நூல்:​ இந்த நக​ரத்​தில் திரு​டர்​களே இல்லை ​(லத்​தீன் அமெ​ரிக்​கச் சிறு​க​தை​கள்)​ ​

​தொகுப்​பும் மொழி​பெ​யர்ப்​பும்:​ ராஜ​கோ​பால்

​வெளி​யீடு:​ நிழல், 31/48 ராணி அண்​ணா​ந​கர், கே.கே.நகர், சென்னை -​78.

Pages