கல்வி -கட்டுப்பாடுகள் தடைகளாகலாமா?

Author: Nagaraji.B /


""உற்றுழி உதவியும் உறுபொருள்கொடுத்தும்


பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே'' -என்ற பழந்தமிழ்பாடலுக்கு ஏற்ப, இன்றைய நிலையில் டொனேஷன் என்ற நன்கொடை மற்றும் உயர்ந்த கட்டணம் கொடுத்துதான் தமிழ்நாட்டில் கல்வி கற்க வேண்டிய நிலை உள்ளது. நான்காயிரத்துக்கும் மேற்பட்ட மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் தமிழ்நாட்டில் உள்ளன. ஏழாம் நூற்றாண்டுகளிலே குருகுலக் கல்வி முறை இருந்தும் கல்விப்பணிக்கூடங்கள் ""கடிகைகள்'' என்ற பெயரில் நாடெங்கும் அமைக்கப்பட்டன. நாளந்தா பல்கலைக்கழம் போல் தமிழ்நாட்டு மன்னர்கள் கல்விப்பயிற்சிக்கென பெரும் கோயில்களிலே விசாலமான பிரகாரங்கள் மண்டபங்கள் கட்டினர். ஆயினும் குருகுல முறைக்கல்வியே சிறந்து விளங்கியது.



இன்று உலகளாவிய வாழ்வியலாலும் அறிவியல் மேன்மையின் காரணமாகவும் கல்வித்துறையிலும் கல்வி முறையிலும் கட்டாயமாக மாற்றம் வேண்டியிருக்கிறது. இத்தேவையை இன்றயை மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் நிறைவு செய்கின்றன. ஆயினும் ஒரு சில பள்ளிகளின் தவறான நிர்வாகத்தால் பள்ளிகளில் குறைபாடுகள் ஏற்பட்டுப் பாதிப்புகள் பல ஏற்பட்டதன் உச்சபட்சமாக 2004ஆம் ஆண்டு நேரிட்ட கும்பகோணம் பள்ளித் தீ விபத்துக்குப்பின் பள்ளிகள் சீரமைப்புக்காக, சம்பத் கமிட்டியைய அரசாங்கம் அமைந்தது.



இதன்படி நாற்பது கட்டட விதிக்கப்பட்டள்ளன. கட்டட உறுதிச்சான்று, சுகாதாரச்சான்று, தீயணைப்புதுறையினரின் சான்று, ரூபாய் இரண்டரை லட்சம் அரசிடம் வைப்புத்தொகை, ஆண்டு ஆய்வுக்கட்டணமாகப் பத்தாயிரம் ரூபாய் முதல் பத்து லட்சம் வரை பங்குத் தொகை முதலியன கட்டுப்பாடுகள். இந்த வகையில் அங்கீகாரம் பெற்ற பின்னரும் கூட பள்ளிகள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகாரம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற கடுமையான நடைமுறையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, சுமார் இரண்டாயிரம் பள்ளிகள் மறு அங்கீகாரம் பெற முடியாமல் தவிக்கின்றன.



அங்கீகாரம் புதுப்பிக்கப்படத் தாமதமோ அல்லது தடைகளோ உள்ள பள்ளிகளில் நிர்வாகமும் ஆசிரியர்களும் தவிப்புநிலைக்கு உட்படுவதுமட்டுமன்றி, படிக்க வருகின்ற பிள்ளைகள் மற்றும் அவர்தம் பெற்றோருக்கும் பதட்டமான மனநிலையை உருவாக்கக்கூடும். ""விஞ்ஞானம் வேகமாக முன்னேறும் ஒரு கல்வி. அதைத் தொடர்ந்து நாம் ஓடவேண்டும்'' என்பது கல்வித்துறை வித்தகர் முனைவர் கி.வேங்கடசுப்பிரமணியம் அவர்களது கருத்து. அதன்படி கல்வித்துறையில் பெருமளவு விஞ்ஞானமயமாகிவிட்ட சூழ்நிலையில் இத்தகைய இடையூறுகள் பள்ளிகளுகு“கத் தவிர்க்கப்பட வேண்டும்.

எனவே, விதிமுறைகளைக் கடைப்பிடிக்க செய்வதில், பாரபட்சமோ நிதிமுறைகேடுகளோ ஏற்படாதவண்ணம் செயல்பட நிரந்தர அங்கீகாரத்தை மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு அளிப்பதுடன் போதிய கட்டுப்பாடுகளைக்கண்காணித்தல், பெற்றோர் ஆசிரியர் சங்கங்களுடன் கல்வி அதிகாரிகளும் அடிக்கடி கலந்துகொண்டு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை உருவாக்கிக்கொள்வது போன்ற நடைமுறைகளே வேண்டத்தக்கது. ""கல்வி என்பது ஆற்றில் எதிர்நீச்சல் போடுவதுபோன்றது. முன்னேறிக்கொண்டே போக வேண்டும். தடங்கல் இருந்தால் பின்னுக்க அடித்து தள்ளிவிடும்'' என்ற சீனப் பழமொழி கல்வி பெறுவதற்கு மட்டுமல்ல; கற்பிப்பதற்கும் உரியது.


0 comments:

Post a Comment

Pages