வித்யை-சங்கராச்சார்ய சுவாமிகள்

Author: Nagaraji.B /


இப்போதுள்ள வித்யைகளும் போதனை முறைகளும் வெற்று லௌகிகத்துக்கும் அகங்காரத்துக்குமே ஆஸ்பதமாக இருக்கின்றன என்பதால் ஆத்மார்த்தமான சாஸ்திரங்களை, கலைகளை, வித்யைகளைக் குறைவாகப் பேசக்கூடாது. இவை எல்லாம் அகங்காரத்தைக் கரைத்து லோக�க்ஷமத்தையும் ஆத்ம �க்ஷமத்தையும் தரவே நம் தேசத்திலே ஏற்பட்டிருந்தன. இப்போதும்கூடப் புதிது புதிதாக விருத்தியாகியிருக்கிற வித்யைகள், டெக்னாலஜி ஆகியவற்றால் எத்தனையோ லோக �க்ஷமத்தை உண்டாக்கலாம்; நல்லறிவை வளர்த்துக் கொள்ளலாம். எல்லா "எலிமென்ட்'களுக்கும் முலமான "எனர்ஜி' ஒன்றேதான் என்று கண்டுபிடித்துவிட்ட அடாமிக் (அணு) ஸயன்ஸிலேயே நன்றாக ஊறினால், அதுவே கூட ஆத்மிக அத்வைதத்துக்குக் கொண்டு போய் விட்டுவிடும். ஓயாமல் ஆசை வாய்ப்பட்டுப் பறப்பாகப் பறந்து கொண்டிராமல், ஆன்றோர்கள் போட்டுத் தந்த வாழ்க்கை முறையை நாம் மேற்கொண்டு வித்யைகளை அப்பியசித்து வந்தால், இன்றும் அவை புறத்துக்கு நல்லது செய்யும்; உள்ளுக்கு ஞானமும் தரும்.


மருந்தோடு பத்தியமும் முக்கியம். வித்யை என்கிற மருந்துக்கு அடக்கம். விநயம் என்கிற பத்தியம் அவசியம். இப்போது அது இல்லாததால் மருந்தே விஷமாயிருக்கிறது. ஆனால் அடக்கத்தோடு பயின்றால் வித்யையே உண்மையில் ஞானம் தரும் அமிருதமாகும்.


- ஜகத்குரு, காஞ்சிகாமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள்.


0 comments:

Post a Comment

Pages