ஜங்க் ஃபுட் -ஒரு தடவைன்னா... தப்பில்லை!

Author: Nagaraji.B /

"ஜங்க் ஃபுட் - இளயை தலைமுறையங்கிஸஅதான் செல்லங்களாக இருந்தால் அவர்களின் விருப்ப மெனு இதுவாகத்தான் இருக்கும். "உடலை ஸ்லிம் சிக் என வைத்துக்கொள்கிறேன்' என்று சாப்பாட்டைத் தவிர்ப்பது யுவதிகளின் பழக்க வழக்கம். "பர்க்கர்', பீட்ஸா', "கட்லெட்', "சிப்ஸ்' என நொறுக்ஸ் வகை உணவுகளை உள்ளே தள்ளி பசியைத் தள்ளி வைக்கின்றனர். ஆனால், அதுதான் சிக்கலுக்கு க்ரிட்டீங் கார்டு என்கிறார்கள் நிபுணர்கள். ஜங்க் ஃபுட் உணவுப் பழக்க வழங்கங்களின் சாதக பாதகங்கைளப் பட்டியல் இடுகிறார் டயட்டீஸியன் தாரணி.



* உடல் திசுக்கள் வளர்ச்சியை நிறுத்தாத வயது வரை தாதுச் சத்துகள் அத்தியாவசியத் தேவை. ஆனால், ஜங்க்ஃபுட் வகைகளில் மாவுச் சத்தும் இதய நோய்களுக்கு வெல்கம் சொல்லும் கொழுப்புச் சத்தும்தான் அதிகம்

* இந்த நொறுக்குத் தீனிகளை மட்டுமே உணவாகச் சாப்பிட்டால் உடல் மெலிந்து சிக் என மாறும் என்பது மூட நம்பிக்கையை விட மோசமான நம்பிக்கை. நிர்ணயிக்கப்பட்ட அளவுகளில் கச்சித இடைவெளிகளில் எடுத்துக்கொள்ளப்படும் சமச்சீர் சத்து உணவுகள் மூலம் மட்டுமே ஸ்லிம் அழகு சாத்தியம்.

* காய்கறிகளை குறைத்துக்கொண்டால் மாவுச் சத்தும், கொழுப்புச் சத்தும் அதிகரித்து உடல் பருமன் அதிகரித்துவிடும்.

* ஜங்க் ஃபுட்டில் அதிகளவில் பிரசர்வேட்டிவ்ஸ் (பதப்படுத்தும் அமிலங்கள்) மற்றும் நிறமிகள் கலந்து இருப்பதால் அல்சருக்கான வாய்ப்புகள் அதிகள்.

* ஜங்க் ஃபுட் வகைகளை உங்களால் தவிர்க்க முடியாவிட்டால் தினமும் மறக்காமல் உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் உடலில் கொழுப்புச் சத்துத் தேங்கி, தொப்பை விழும்.

* காலை உணவுக்கு நேரம் இல்லாதவர்களுக்கு ஜங்க் ஃபுட் வரப் பிரசாதமாகத் தோன்றலாம். ஆனால், மெள்ள மெள்ள அவர்களின் கவனிக்கும் திறனும் உடல் வளர்ச்சியும் குறையும் வாய்ப்புகள் அதிகம் என்கின்றன சமீப ஆராய்ச்சிகள்.

* "சமச்சீரான சாப்பாடு'- இதுதான் ஜங்க் ஃபுட் ஏற்படுத்தும் பிரச்னைகளுக்கு ஒரே தீர்வு.

* கடைசியாக ஒரு ஆறுதல் செய்தி... வாரம் ஒருமுறை... ஒரே முறை "ஜங்க்ஃபுட்' சாப்பிடலாம். தப்பில்லை!

0 comments:

Post a Comment

Pages