பூஜை, பக்தி, காம்!(இணையத்தளம் )

Author: Nagaraji.B /


* விநாயகர் ஸ்லோகங்கள் தவிர காலையின் எழுந்தவுடன், சாப்பிடும்போது, குளிக்கும் போது, படுக்கச் செல்வதற்கு முன்பு சொல்லவேண்டிய குட்டி, குட்டி ஸ்லோகங்கள் நிறைய உள்ளன. பூஜைகள் எப்படிச் செய்ய வேண்டும்? துளசி பூஜை எப்படிச் செய்வது? என்பதைத் தெளிவாக விளக்குகிறது. கணேசா பக்தர்களுக்குப் பிரியமான இணையத்தளம் .www.ganesh.us







* முருகப் பெருமான் பக்தர்கள் விசிட் செய்ய வேண்டிய பக்கம்www.kaumaram.com முருகன் பற்றிய விளக்கம், கந்த சஷ்டிக் கவசப் பாராயணம், சஷ்டி விரதம் அதை அனுஷ்டிக்கும் முறை, திருப்புகழ் பாடல்கள், திருப்புகழ்க் கதைகள், சிறுவர்கள் வண்ணம் தீட்ட முருகன் படங்கள். தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் உள்ளது. நிறைய பாடல்களைக் கேட்கவும், பதிவிறக்கமும் செய்யலாம். உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் பக்தியுடன் பாடியுள்ள பாடல்கள், அருணகிரி நாதர் அருளிய, திருப்புகழ் விளக்கத்துடன் உள்ளது இதன் சிறப்பு.







* பெங்களூரில் உள்ள காயத்ரி தேவி கோயில். ஐந்து தலை / மூன்று கால்கள் கொண்ட காயத்ரி தேவிக்கு யஷ்வந்த்பூரில் இருக்கும் கோயில். அக்கோயிலுக்குச் செல்லும் வழி, அமைந்துள்ள இடம், காயத்ரிதேவியின் மகிமை மற்றும் இங்கு செய்யப்படும் சமூகப் பணிகளையும் தெரிந்து கொள்ள உதவுகிறது. www.gayathridevi.info




* ருத்ராட்சம், பூஜைப்பொருள்கள், வால் ஹேங்கிங் என ஆன்லைனில் வாங்கலாம். ஒரு முகம் முதல் இருபத்தொரு முகம் வரை ருத்ராட்ச மகிமை விபரம் தரும் பக்கம் www.rudrakscollection



* குருவாயூரப்பனைத் தரிசிக்க ஆசையா? www.guruvayurdevaswom.org குருவாயூரப்பனுக்குச் செய்யப்படும் பூஜைகள், கோயில் அமைந்துள்ள இடம், ஆலய அலுவலகத்தைத் தொடர்பு கொள்ள உதவும் தொலைபேசி எண்கள், ஆலய அலுவலகம் ஏற்பாடு செய்து தரும் தங்கும் வசதி அதன் கட்டணங்கள் பற்றிய பல பயனுள்ள தகவல்கள் உள்ளன.


* திருவருட்பா, திருஅருட்பா உரைநடைப் பகுதி, இராமலிங்க அடிகளின் தத்துவங்கள், அடிகளின் வரலாறு உள்ளன. தத்துவங்கள், அடிகளின் வரலாறு உள்ளன. "அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என உலகத்துக்கு அருளிய வள்ளலார் பற்றி அறிய www.vallalar.org



* செவ்வாய் தோஷத்தை நிவர்த்தி செய்ய வைத்தீஸ்வரன் கோயில் செல்ல வேண்டுமா? நவக்கிரக கோயிலையும். திருக்கடையூரையும் தரிசிக்கலாம். அமைந்துள்ள இடம், செல்ல வழி, தங்கும் வசதி அனைத்தும் விவரமாக உள்ளது. www.sadhabishegam.net



* சாயிசரித மகிமை! கல்யாணமாகாத கன்னிப் பெண்கள் நல்ல வரன் அமைய பெறவும். கல்யாண ஆன பெண்கள் குடும்ப அமைதிக்காக வீட்டிலேயே செய்ய வேண்டிய மகாலக்ஷ்மி பூஜை பற்றிய விபரங்களையும் அழகாக, படிப்படியாகக் கூறுகிறது. ஷீரடி சாயிபாபா மகிமையை எடுத்துரைக்கிறது. "ஓம் லக்ஷ்மி கணபதேயே நமஹ' என்று ஜபிக்கச் சொல்கிறது. www.starsai.com


* பகவான் பிரஷாந்தி நிலையத்திலிருந்து வரும் ஆன்மிகக் கருத்துகள், தளத்தில் பதிவு செய்தால் அன்றன்று உங்கள் மின்னஞ்சல் முகவரி தேடி வரும். ருத்ரம் கற்கலாம். பாபாவின் அருளுரைகள், அனுபவங்கள், அற்புதங்கள் என பாபா பக்தர்களுக்கு, பரவசம் தரும் தளம். www.radiosai.org


* எப்படி மந்திரங்கள் வேலை செய்கின்றன. எப்படி ஜபம் செய்ய வேண்டும். கணபதி, சிவன், தேவி, ஸ்கந்த, விஷ்ணு, மகாலக்ஷ்மி, சரஸ்வதி, சூரியஸ்துதி, எனப் பல மந்திர, ஸ்லோகங்களை உள்ளடக்கிய தளம். http.//mailerindia.com



* ஸ்ரீராகவேந்திரரின் வரலாறு, உண்மை அனுபவங்கள், படங்கள், ராகவேந்திரகவசம், ராகவேந்திர ஸ்லோகம் கேட்டு மகிழலாம். www.pujyaya.org


* நம் இந்து தர்மத்தை அடுத்த தலைமுறையினருக்கு, எடுத்து சொல்ல இடமும், நேரமும் இருந்தால் அருகிலுள்ள குழந்தைகளுக்கு வாரம் ஒரு நாள் வகுப்பு எடுக்கலாம். எப்படி எடுக்கலாம். சிலபஸ் என அனைத்து தகவல்களும் உள்ளது. www.balakulam.org


* இந்து மதம் தோன்றிய வரலாறு, கோயில்களின் சிறப்புகள், சிறுவர்களுக்கான கதைகள், அறிஞர்கள் எழுதிய புத்தகங்கள், பூஜைகள், பூஜை வழிமுறைகள் என விரிந்து கொண்டே செல்கிறது.www.hinduboodks.org


* "ஓம்' என்று ஓதுவதின் மஹிமை பற்றி அறிய, தினமும் சில நிமிடங்கள் "ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை ஓதுவதின் மகத்துவம் அறிய உதவுகிறது. www.meditationseasy.com

* அனுமன் பற்றி தெரிந்து கொள்ள www.panchamukha.org திருவள்ளுவர் (சென்னைக்கு அருகே) பஞ்சமுக ஆஞ்சநேயரின் சிறப்புகள், நூற்றியெட்டு ஹனுமான் அஷ்டோத்திர நாமாவளி, ராம நாமாவளி ஹனுமான் சாலிகா கற்கலாம்.

* உங்கள் வீட்டுக் கொலுவை எந்த மாடலில் வைப்பது எனக் குழப்பமா? அல்லது உங்கள் வீட்டுத் கொலுவை அனைவரும் பார்க்க ஆவலா http//teenwag.com.searchphoto//navaratri சைட்டுக்கு விஜயம் செய்யுங்கள். சென்ற வருட, கொலு புகைப்படங்கள் ஏராளமாக உள்ளன.


* இஸ்லாமிய அன்பர்களின் திருக்குரான், தமிழில் எளிய நடையில் அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் www.tamilquran.com வலைதளத்தில் உள்ளது.


* ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமிய சகோதரிகள் குடும்பத்தினரையும், நண்பர்களையும், உறவினர்களையும் இரவு உணவில் அசத்த உதவும் பக்கம்http//www.receipezaar.com/receipes/ramadan


* "யாவருக்கு மாமிறைவற்கொரு பச்சிலை' என்ற திருமந்திரத்தில் கடைசிவரி "யாவருக்கும் மாம் பிறர்க்கின்றுரைதானே' என்கிறது. அதையே எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் வன்முறை இல்லாமல் இருப்போம் என்கிறார் தீபக் சோப்ரா. உலக நலம் காக்க செல்ல வேண்டிய தளம்www.itakethevow.com

0 comments:

Post a Comment

Pages