Become a பிஸினஸ் மேக்னட்!

Author: Nagaraji.B /


நானும் வருஷக்கணக்கா ஒரு கம்பெனி தொடங்கி சாதிக்கணும்னு கனவு காண்றேன். ஆசை வெறும் கானல்நீராப் போச்சு என்று தொழில் ஆர்வம் உள்ளவர்கள் கவலையுடன் பேசுவதைப் பார்த்திருக்கிறோம். இதில் பலர் அதிர்ஷ்டத்தையும் ஜாதகத்தையும் காரணம் காட்டுவார்கள்; என்னிடம் பணம் இல்லை; படிப்பு இல்லை; உதவும் சொந்தக்காரர்கள் இல்லை; அனுபவம் இல்லை; என் உடல்நலத்தில் பல கோளாறுகள்; பெண்ணாகப் பிறந்துவிட்டேன்... இப்படி பல சாதனையாளர்களுக்கு இந்தக் காரணங்கள் இருந்திருக்கின்றன. ஆனாலும் அவர்கள் ஜெயித்துக் காட்டியிருக்கிறார்கள் எப்படி?
தொழில் தொடங்கப் பணம் வேண்டாம்



* இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், துபாய் போன்ற 18 நாடுகளில் 64 உணவகங்கள், 18 பேக்கரிகள், ஆண்டு விற்பனை 120 கோடிக்கும் மேல்! ஹாட் பிரெட்ஸ் மகாதேவன் வியாபாரம் தொடங்கியபோது, அவரிடம் இருந்த பணம் ஐநூறே ரூபாய்.



* 23 கிளைகள் பல இறக்குமதி, காளான் வளர்ப்பு ஆகிய துறைகளில் முத்திரை பதித்திருக்கும் கோவை பழமுதிர் நிலையம் தொடங்கியவர் சின்னசாமி. அவருடைய முதல் கடை, தள்ளு வண்டி!



தொழில் தொடங்க படிப்பு வேண்டாம்
* நம்மைப் பேரீச்சம்பழ ரசிகர்களாக்கிய லயன் டேட்ஸ் நிறுவன அதிபர் பொன்னுத்துரையின் படிப்பு பத்தாம் வகுப்பு.



தொழில் தொடங்கச் செல்வாக்கான குடும்பப் பின்னணி வேண்டாம்
Bharatmatrimony.com சுமார் பத்து லட்சம் திருமணங்கள் நடக்கப் பாலமாக இருந்திருக்கிறது. மாதம் 35 லட்சம்பேர் உறுப்பினர்களாகச் சேர்கிறார்கள். இந்த வெற்றிக் கதைக்கு வித்திட்ட முருகவேல் ஜானகிராமனின் அப்பா, சென்னை துறைமுகத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளி. பதினாறு ஒண்டுக் குடித்தனங்களுக்கு நடுவில் ஒரே ரூம் வீடு.



தொழில் தொடங்க அனுபவம் வேண்டாம்
* அறுநூறு கோடிக்கும்மேல் வருட வருமானம் தரும் நம் எல்லே,�ருக்கும் பரிச்சயமான ஃபேஸ்புக்(Facebook) தொடங்கியவர் மார்க் ஸூக்கர்பெர்க் (Mark Zuckarberg) கம்பெனி தொடங்கியபோது அவர் இருபது வயதுப் பொடியர்.



தொழில் தொடங்க சிறப்பான உடல்நலம் வேண்டாம்
* டாமி ஹில்ஃபிகர் (Tommy Hilfiger) வடிவமைக்கும் சட்டைகள், டி ஷர்ட்கள் உலகம் முழுக்கப் பிரபலம். இவர் உரை மாறுபாடு எனத் தமிழில் கூறப்படும். நரம்புக் கோளாறு நோயால் பாதிக்கப்பட்டவர்.



தொழில் தொடங்க ஆணாக இருக்க வேண்டாம்
* பயோகான் நிறுவனம் இந்தியாவின் முன்னணி பயோடெக் கம்பெனி. ஆண்டு வருமானம் சுமார் ஆயிரம் கோடி. இதை நிறுவி, தலைமையேற்று நடத்துபவர் திருமதி கிரஸ் மஜும்தார் ஷா.



* பாரு ஜெயக்கிருஷ்ணா, குஜராத் மாநிலத்தில் இவர் குடும்பம் பிஸினஸில் ஈடுபட்டிருந்தது. ஏகப்பட்ட நஷ்டம். கம்பெனி மூடப்பட்டது. குழந்தைகள், குடும்பச் செலவுகளுக்கு சொத்துக்களிலிருந்து வந்த வாடகை வருமானம் போதவில்லை. அஸாஹி ஸாங்கோவன் Asaahi Songowon) என்ற பெயின்ட்களுக்கான மூலப்பொருட்கள் தயாரிக்கும் கம்பெனியை தம் 48வது வயதில் தொடங்கினார். அதன் இன்றைய வருட விற்பனை இருநூறு கோடிக்கும் மேல்.



எனில் பிஸினஸ் தொடங்க என்னதான் வேண்டும்?
* முன்னேறும் வெறி, ரிஸ்க் எடுக்கும் துணிச்சல், தெளிவான இலக்கு, கடும் உழைப்பு, வித்தியாசச் சிந்தனை, நிர்வாகத் திறமை, அவ்வளவுதாங்க... அது போதும்!
- எஸ்.எஸ்.வி. மூர்த்தி


0 comments:

Post a Comment

Pages