உலகை உலுக்கிய புத்தகங்கள்!

Author: Nagaraji.B /

வேண்டாம் அறிவுரை!

- மருதன்



உலகை உலுக்கிய புத்தகங்கள்!

பைபிள் வாசகர்களுக்கு அடுத்தபடியாக இலக்கிய உலகம் அதிகம் எடுத்தாள்வது ஆஸ்கார் ஒயிஸ்ட் எழுத்துகளைத்தான், இதை விநோதம் என்றுதான் அழைக்கவேண்டும். பைபிள் ஒரு நீதிப் புத்தகம். ஆஸ்கார் ஒயில்டோ நீதி, நேர்மை, சத்தியம், புண்ணியம். ஒழுக்கம். நம்பிக்கை. நட்பு, காதல் என்று பிறர் புனிதப்படுத்தும் அத்தனை விஷயங்களையும் பக்கம் பக்கமாகக் கிண்டலடிப்பவர்.

சிறிதளவு நேர்மை இருப்பது ஆபத்தானது. அதிகபட்ச நேர்மையுடன் இருப்பது உயிருக்கே உலை வைத்துவிடும். நல்ல அறிவுரையை யாராவது உங்களுக்கு வழங்கினால், அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று முழிக்க வேண்டாம். உடனே மற்றவர்களுக்கு கொடுத்துவிடுங்கள். நல்ல அறிவுரையை நாம் வைத்துக் கொள்ளக்கூடாது.

தன்னையும் சேர்த்தேதான் கிண்டலடித்துக் கொள்வார். "நான் சொல்வதை மக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டால் உடனே எனக்குப் பயம் பிறந்துவிடும். ஒருவேளை நான் சொன்னது தவறானதாக இருக்குமோ? அதனால்தான் என் கருத்துகளுக்கு இத்தனை வரவேற்பு கொடுக்கிறார்களோ?'

பதிப்பாளர் ஒருவர் ஒயில்டிடம் பேசினார். உங்கள் நாடகம் பிரமாதமாக இருக்கிறது. பிரசுரத்துக்கு ஏற்றுக் கொள்கிறேன் உங்களுக்கு ராயல்டி வேண்டுமா அல்லது உடனடித் தொகை வேண்டுமா? ஐந்தாயிரம் டாலர்வரை தர சித்தமாகயிருக்கிறேன். ராயல்டி என்றால் புத்தகம் எவ்வளவு விற்கிறதோ அவ்வளவுக்குத்தான் தரமுடியும்.'' ஒயில்ட் அவர் கைகளைப் பற்றிக் கொண்டார். உங்களைப் பார்த்தால் மிகவும் நல்லவராகத் தெரிகிறது. நான் உங்களைப் பரிபூரணமாக நம்புகிறேன். எனக்கு ராயல்டியே போதும்.''




The Importance of Being Earnest. An Ideal Husband. Lady Windermere's Fan என்று ஒயில்ட் எழுதிய ஒவ்வொரு நாடகமும் கொண்டாட்டத்துடன் வரவேற்கப்பட்டது. நாடகம் மேடையேறிய ஒவ்வொரு முறையும் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஒயில்டை மேடையேற்று, நாங்கள் அவரைப் பார்க்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள். நாடக உலகில் முதல் முறையாக ஒரு எழுத்தாளர் மேடையேறினார். கையசைத்தார்.



ஒயில்ட் எழுதிய ஒரே நாவல் The Picture of Drian Gray. நாடகங்கள் எழுதியே பழக்கப்பட்ட கை என்பதால் இதையும்கூட, “வன், அவள் என்கிற ரீதியில் நாடகமாகவே எழுதிவிட்டார். பதிப்பாளர் ஒயில்டை அழைத்துப் பேசினார். நாவல் வடிவம் இதுவல்ல. இடம், மனிதர்கள், உணர்வுகள் பற்றிய வர்ணனைகள் விலாவாரியாக வரவேண்டும்.'' சரி என்று வாங்கிக் கொண்டு போன ஒயில்ட், உரையாடல்களுக்கு இடைவிடையே சில வர்ணனைகளைச் சேர்த்துவிட்டு, இந்தா என்று கொடுத்துவிட்டார். கதையின் உள்ளடக்கத்துக்காக பலத்த சர்ச்சைகளுக்கு அப்போது உள்ளான இந்த நாவல், இன்று உலக இலக்கியமாகப் போற்றப்படுகிறது.

1854ல் பிறந்த ஆஸ்கர் ஒயில்ட், தமது நாற்பத்தாறாவது வயதில் காலமானார். இறப்பதற்கு முன்னால் இரு ஆண்டுகளைச் சிறையில் கழித்தார். ஒழுங்கீனம் தொடர்பான வழக்கொன்றில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். சம்பாதித்த செல்வம் அனைத்தையும் தமது இறுதிக் காலத்தில் ஒயில்ட் ழந்திருந்தார். சிறையில் இருந்து வெளிவந்த பிறகும், தம்மைத் தாமே சிறை வைத்துக் கொண்டார் ஒயில்ட். நண்பர்கள், வாசகர்கள், பதிப்பாளர்கள் அனைவரையும் தவித்தார்.


நையாண்டியும் எகத்தாளமும் நிரம்பி வழிந்தாலும், ஒயில்டின் எழுத்துகள் நிச்சயம் எதிர்மறையானவை அல்ல. ஓர் உதாரணம். இழந்துபோன என் இளமையை மீட்க எதையம் செய்யத் தயாராக இருக்கிறேன். மூன்று விஷயங்களைத் தவிர காலை சீக்கிரம் படுக்கையில் இருந்து எழுந்திருப்பது, உடற்பயிற்சிகள் செய்வது, மதிக்கத்தக்க மணிதராக வாழ்வது.'


0 comments:

Post a Comment

Pages