திருமணத்தை ஏன் பதிவு செய்யணும்?

Author: Nagaraji.B /

திருமணத்தை ஏன் பதிவு செய்யணும்?மார்ச் 08,2010,12:47 IST

- பாலா நடராஜன்
“அண்மையில் ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தேன். முகூர்த்தம் முடிந்த சிலமணி நேரத்தில் மணமக்கள் திருமணப்பதிவாளர் அலுவலகத்தில் மணமக்கள் திருமணப்பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்றார்கள். திருமணத்துக்கு வந்திருந்த சிலர் பத்திரிகை அடிச்சு உற்றார், உறவினர்கள் சூழ திருமணம் நடந்திருக்கும்போது எதற்காகத் திருமணத்தைப் பதிவு பண்ணணும்? என்று கேட்டார்கள். திருமணத்தைப் பதிவு செய்வதுஐ இன்றைய கால கட்டத்தில் அவசியம் என்று அவர்களுக்கு விளக்கிச் சொன்னேன்.
திருமணத்தைப் பதிவு செய்வதன் அவசியத்தைப் பற்றி பார்ப்போம்.
இந்து மத சம்பிரதாயப்படி நடக்கும் திருமணம், கோயில்களில் வைத்து நடக்கும் திருமணம். சுயமரியாதைத் திருமணம், சிறப்பு திருமண சட்டத்தின்படி நடக்கும் திருமணம். கிறிஸ்தவ, இஸ்லாமிய பார்சி முறைப்படி நடக்கும் திருமணங்கள் என்று பலவகை உண்டு. ஆனால் சமீபகாலமாக, காதலர்கள் வீட்டை விட்டு ஓடி வந்து காவல் நிலையங்களில் தஞ்சம் அடைந்துகொள்ள, அங்கிருக்கும் காவல் அதிகாரியே அவர்களது திருமணத்தை நடத்தி வைக்கும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.
சிலர் சாட்சிகள் யாருமின்றி கோயில்களில் திருமணம் செய்து கொள்கிறார்கள். இதுபோல இன்னும் சில சூழ்நிலைகளில் நடக்கும் திருமணங்களில் கணவன் - மனைவி இருவருக்குள் பின்னால் பிரச்னை என்று வந்தால், அப்போது திருமணம் நடந்தது என்பதற்கே சட்டப்பூர்வமான சாட்சிகள் ஏதுமில்லாது போய்விடக்கூடும்.
இன்னொரு பக்கம் இன்று ஏராளமானவர்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, வளைகுடா நாடுகள் என்று பல்வேறு அயல்நாடுகளுக்கும் பணி நிமித்தம் செல்ல வேண்டியிருக்கிறது. அதற்காக பாஸ் போர்ட்டுக்கும், விசாவுக்கும் விண்ணப்பிக்கும்போது, இவர் இன்னாருடைய கணவர் அல்லது மனைவி என்பதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டியது அவசியமாகிறது. திருமண அழைப்பிதழே இதற்குப் போதுமானது என்றாலும், திருமணத்தை சட்டப்படி பதிவு செய்து அதற்குரிய பதிவாளர் வழங்கும் சான்றிதழ் வாங்கி வைத்துக் கொண்டால் இன்னும் பாதுகாப்பு.
விவாகரத்து வழக்குகள் இன்று அதிக அளவில் நீதிமன்றங்களுக்கு வருகின்றன. அப்போது விவாகரத்து கோரும் இருவரும் கணவன் - மனைவி என்பதற்காக சட்டப்பூர்வமான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். சட்டப்பூர்வமாக கணவன் = மனைவி இல்லாத இருவர் எதற்காக விவாகரத்து கோருங்கள் என்று நீங்கள் நினைக்கலாம்? நான் கேள்விப்பட்ட ஒரு வழக்கில், ஒரு கணவன், தன் மனைவி அல்லாத வேறு ஒரு பெண்ணை இவள்தான் என் மனைவி என்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி, விவாகரத்தே வாங்கிக் கொண்டு போய்விட்டார். இதுபோன்ற ஆள்மாறாட்டக் குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு கணவன் - மனைவி இருவரது புகைப்படங்களும் ஒட்டப்பட்ட திருமணச் சான்றிதழ் மிகவும் கைகொடுக்கும்.
திருமணங்கள் இந்து திருமணப்பதிவேட்டில், பதிவு செய்யப்பட வேண்டும் என்று முன்பு இருந்தது. இப்போது திருமணங்களைப் பதிவு செய்யப்பட வேண்டும் �ன்று அரசாங்கமும், உச்சநீதிமன்றமும் அறிவுறுத்தியுள்ளன. திருமணத்தைப் பதிவு� சய்வதன் மூலமாக இன்னார் இருவரும் திருமணம் செய்து கொண்ட தம்பதி என்பதற்கு ஆதாரம் கிட்டுகிறது. பிற்காலத்தில் ஏதாவத பிரச்னை வருமாயின், திருமணமே நடக்கவில்லை என்று யாரும் மறுக்கமுடியாது. திருமணமான ஒருவர் மேற்படிப்புக்காகவோ, வேலை நிமித்தமோ, பிற காரணங்களுக்காகவோ, தன்னுடைய மனைவியை அழைத்துக் கொண்டு வெளிநாடு செல்லும் போது, திருமணத்துக்கான ஆதாரத்தைக் கேட்பார்கள். திருமணம் பதிவு செய்யப்பட்டிருந்தால் திருமணச் சான்றிதழை அளித்து, நிரூபிப்பது எளிதாக இருக்கும்.
திருமணத்தைப் பதிவு செய்யவில்லை என்றால், பாஸ் போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது, கூடுதலாக ஒரு அஃ“பிடவிட் தரவேண்டி இருக்கும். அதில் எங்கள் மதமுறைப்படி நாங்கள், திருமணம் செய்து கொண்டபோதிலும், எங்கள் திருமணம் பதிவு செய்யப்படவில்லை, நாங்கள் இருவரும் கணவன் - மனைவி எங்களுக்கு இந்த இடத்தில் இன்ன தேதியில் திருமணம் நடந்தது என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். மேலும் கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படம், அதிலே ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.
- எழுத்து வடிவம்: எஸ்.சந்திரமௌலி.

மங்கையர் மலர்


0 comments:

Post a Comment

Pages