படித்​த​தில் பிடித்​தது: பிரிவு

Author: Nagaraji.B /

படித்​த​தில் பிடித்​தது: பிரிவு

​அபா நக​ரம் நில​ந​டுக்​கத்​தால் அழிந்​து​போன நாளில் ஒரு தாய் தன் மகன் மர​ண​ம​டை​வ​தைப் பார்த்​தாள்.​ அவ​ளால் அந்த மர​ணத்தை ஏற்​றுக்​கொள்ள முடி​ய​வில்லை.​

அவ​னைத் திருப்​பித் தரு​மாறு தெய்​வங்​க​ளி​டம் வேண்​டி​னாள்.​ கருணை கொண்ட தெய்​வங்​க​ளும் அந்​தக் குழந்​தை​யின் ஆன்​மாவை மறு உல​கத்​தில் நுழைய அனு​ம​திக்​கா​மல் மறு​ப​டி​யும் அதை அவ​னு​டைய உட​லி​லேயே புகுத்​தி​விட்​டன.​ ஆனால் தெய்​வங்​க​ளைப் பற்​றித்​தான் உங்​க​ளுக்​குத் தெரி​யுமே!​ அந்த உடல் இன்​ன​மும் செத்​துத்​தான் கிடக்​கி​றது.​

அதன் காயங்​கள் ஆற​வில்லை.​ மகன் திரும்​பக் கிடைத்​து​விட்ட சந்​தோ​ஷத்​தில் திளைத்த தாய்,​​ அது கஷ்​டப்​ப​டு​வ​தை​யும் துன்​பு​றுத்​தும் தனது சதைப்​பிண்​டத்​தின் கைதி​யா​கி​யி​ருப்​ப​தை​யும் கண்டு பீதி அடைந்​தாள்.​ அதன் பிற​கு​தான் அந்​தக் கொடுமை நிகழ்ந்​தது.​

குழந்தை அழ ஆரம்​பித்​தது.​ புழுக்​கள் அதன் மீது அப்​பிக்​கொண்டு அதன் உட​லுள் புகுந்​தன.​ அது சாவை வேண்டி அழு​தது.​ ஆனால்,​​ நான்​தான் சொல்​கி​றேனே,​​ அது ஏற்​கெ​னவே இறந்​து​போ​யி​ருந்​தது.​ நொந்​து​போன அந்​தத் தாய் அதைக் கத்​தி​யால் குத்​தி​னாள்.​

ஒரு​முறை,​​ இரண்டு முறை,​​ மூன்று முறை,​​ பல முறை.​ பிறகு பெரிய பாறை​க​ளால் தாக்​கி​னாள்.​ விஷத்​தைக் கொடுத்​தாள்.​ கழுத்தை நெரித்​தாள்.​ ஆனால் அந்​தக் குழந்தை வலி​யில் அழு​து​கொண்டே இருந்​தது.​ கடை​சி​யில் அந்​தத் தாய் தோல் கிழிந்த,​​ எலும்​பு​கள் உடைந்த,​​ இரத்​தம் உறைந்த அந்த உட​லைத் தூக்​கிக்​கொண்​டு​போய் நெருப்​பில் எறிந்​தாள்.​

பாவப்​பட்ட அந்​தக் குழந்​தை​யும் எரிந்து புகை​யா​க​வும் சாம்​ப​லா​க​வும் மாறி​யது.​ காற்று அதைச் சித​ற​டித்து வெளி​யெங்​கும் கலக்​கச் செய்​தது.​ அந்​தத் தாய் முடிந்த அளவு அவ​ளைத் தேற்​றிக்​கொண்​டாள்.​ ஆனால்,​​ அவள் அதைச் ​ செய்​தி​ருக்​கக் கூடாது.​

ஏனென்​றால் அந்​தக் குழந்​தை​யின் ஆன்மா கண்​ணுக்​குப் புலப்​ப​டாத அந்த எச்​சங்​க​ளின் வழி​யாக அலைந்​து​கொண்​டு​தான் இருக்​கி​றது.​ துய​ருற்ற அந்த ஆன்மா உல​கில் இன்​ன​மும் உயி​ரோ​டு​தான் இருக்​கி​றது.​ சுவா​சிக்​கும்​போ​தும்,​​ வாயைத் திறக்​கும்​போ​தும்,​​ நீங்​கள் அதை உணர்​கை​யில் திடீ​ரென்று ஒரு சோகம் உங்​கள் மீது கவி​யும்.​

​சிறு​க​தை​யா​சி​ரி​யர்:​ ஆல்​பெர்தோ சிம்​மல் ​(மெக்​சிகோ)​ நூல்:​ இந்த நக​ரத்​தில் திரு​டர்​களே இல்லை ​(லத்​தீன் அமெ​ரிக்​கச் சிறு​க​தை​கள்)​ ​

​தொகுப்​பும் மொழி​பெ​யர்ப்​பும்:​ ராஜ​கோ​பால்

​வெளி​யீடு:​ நிழல், 31/48 ராணி அண்​ணா​ந​கர், கே.கே.நகர், சென்னை -​78.

0 comments:

Post a Comment

Pages