அத்தனைக்கும் ஆசைப்படு

Author: Nagaraji.B /

உங்களில் ஒரு நிச்சயமான ஆக்கப்பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறீர்களா? வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் ரசித்து வாழ விருப்பமா? எல்லாப் பொழுதையும் இனமையாக ஆனந்தமாக அனுபவிக்க வழி தேடுகின்றவரா? கடவுள் பற்றிய பழமையான எண்ணஞ்களிலிருந்து வெளிப்பட்டு என்றும் ஏற்றுக்கொள்ளத்தக்க புதிய நோக்கில் சிந்தனையில் காண விருப்பமா? சுருங்கக்கூறின் வாழ்க்கையின் அத்துணை பரிமாணங்களையும் ஆனந்தமாக வாழ்ந்திட வழிகாட்டுகிறது சத்குரு ஜக்கிவாசுதேவின் "அத்தனைக்கும் ஆசைப்படு" . ஆனந்தவிகடன் இதழில் தொடராக வெளியிடப்பட்டு தற்போது தனிப்புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது சுயவளர்ச்சி தொடர்பாக ஏராளமான புத்தகங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
இன்னும் சொல்லப்போனால் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இதன் விற்பனை தற்போது அதிகம் சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளது. காரணம் மனிதன் தற்போது தன்னை ஊக்குவிக்கும் உற்சாக மருந்தாக, வாழ்க்கைப்பற்றிய உண்மைத் திறவுகோலாக, வழிகாட்டுதலாக, வளர்ச்சிப் பாதையில் தன்னை முடுக்கும் உந்துசக்தியாக இம்மாதிரியான புத்தகங்களை கருதி ஏற்றுக்கொண்டிருப்பது தான்.

இத்தகைய புத்தகங்கள் பல வெளிவந்து கொண்டிருந்தாலும் அவையாவும் பிறர் கூறியவற்றை திருப்பிக்கூறும் எதிரொலியாகத்தான் இருக்கின்றன. மாற்று சிந்தனை,
புதியநோக்கு என்பதெல்லாம் இல்லாமல் முழுக்க முழுக்க செயற்கையாகத்தனமான புத்தகங்கள் தான் அதிகம் காணப்படுகின்றன.

"அத்தனைக்கும் ஆசைப்படு" மேற்கூறியவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. வாழ்க்கையை முழுமையாக ரசிக்கக் கற்றுத்தருவது.

துன்பத்திற்க்குக் காரணம் ஆசையா?
மகிழ்ச்சி என்பது என்ன?
பிரச்சனைகளை எதிர்கொள்வது எப்படி?
வெற்றியடைய என்ன செய்ய வேண்டும்?
வாழ்க்கையை நம் விருப்பப்படி அமைத்துக்
கொள்வது எப்படி?
மனப்பூர்வமாக செயாலாற்றுவது எப்படி?
வாஸ்து, ஜாதகம் இவையெல்லாம் உண்மையா?
கடவுள் என்பவர் யார்? அவர் எத்தகையவர்?

இப்படி ஏராளாமான விஷயங்களை ந்மக்கு தெளிவுபடுத்துவதோடு நம்மில் ஒரு நிச்சயமான மாற்றத்தை ஏற்படுத்துகிறது. வாழ்க்கையை ஒரு புதிய கோணத்தில் சந்திக்கவும், சிந்திக்கவும் செய்கிறது. "எதையும் ரசித்து ஈடுபாட்டுடனும், மனப்பூர்வமாகவும் செயலாற்றுவதினால் வெற்றி நிச்ச்யம் நம் வசமாகும்" என்னும் இப்புத்தகத்தை அனைவரும் வாழ்நாளில் ஒருமுறையாவது நிச்சயம் படித்திட வேண்டும்.


0 comments:

Post a Comment

Pages