புத்தக விமர்சனம்

Author: Nagaraji.B /

புத்தக விமர்சனம்

னவரி 27, 2010... அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரத்திலுள்ள 'யெர்பா பியூனா சென்டர் ஃபார் ஆர்ட்ஸ்' மையம் முக்கியமான ஒரு வி.ஐ.பி-க்காக காத்துக் கொண்டிருந்தது. 70 மற்றும் 80-களில் கணினித் துறையைக் கலக்கிய ஆப்பிள் கம்ப்யூட்டரின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்தான் அந்த வி.ஐ.பி. அன்றைய தினம், ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த மெகா தயாரிப்பான 'வீறிணீபீ' என்கிற டேப்லட் (TABLET) கம்ப்யூட்டரை அகில உலகுக்கும் அறிமுகம் செய்யவிருந்தார் ஸ்டீவ்.
புதுமைக்கும், புரட்சிகரமான யோசனைகளுக்கும் உலகளவில் பெயர் பெற்றது ஆப்பிள் நிறுவனம். இந்த நிறுவனத்தின் பிதாமகனான ஸ்டீவ் ஜாப்ஸ், 1976-ல் அந்த நிறுவனத்தை தனது பெற்றோர்களின் கார் ஷெட்டில்தான் ஆரம்பித்தார். நன்றாக நடந்துவந்த நிறுவனம் 1980-களில் கொஞ்சம் தடுமாற ஆரம்பித்தது. நிறுவனத்தின் உட்பூசலால் அதைத் தொடங்கிய ஸ்டீவையே தூக்கி யெறிந்தனர் உடனிருந்தவர்கள். அதற்குப் பிறகு ஸ்டீவ் தனியாக 'நெக்ஸ்ட்' (NeXT) என்கிற நிறுவனத்தையும் அனிமேஷன் திரைப்படங்கள் தயாரிக்கும் 'பிக்ஸர்' (Pixar) என்கிற நிறுவனத்தையும் ஆரம்பித்து, மீண்டும் வெற்றிக்கொடி நாட்டினார்.
1997-ல் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை அதலபாதாளத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்த சமயத்தில் ஸ்டீவ்வின் 'நெக்ஸ்ட்' நிறுவனத்தின் திறமை கண்டு அதற்கு விலை குறிக்கப்பட்டது. அதன்படி, கிட்டத்தட்ட 450 மில்லியன் டாலர்களுக்கு அது ஆப்பிளால் வாங்கப்பட்டது. ஸ்டீவ் மீண்டும் அந்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். இதனால் மூடப்படவிருந்த ஆப்பிள் நிறுவனம் காப்பாற்றப்பட்டது.
இந்தப் புத்தகத்தில் ஆப்பிள் நிறுவனம் பற்றியும் அந்நிறு வனத்தின் கண்டுபிடிப்புகளுக்கு பின்னால் இருக்கும் செயல்திறன் பற்றியும் விலாவாரியாக எடுத்துச் சொல்லி இருக்கிறார் ஆசிரியர் லியாண்டர். ஸ்டீவ்வின் குணாதிசயங்களான முழுமைத்துவம், சிறுசிறு விஷயங் களிலும் கவனம் செலுத்தும் தன்மை, பொருளின் வடிவமைப்புக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் போன்ற பல விஷயங்களையும் அலசி ஆராய்ந்திருக்கிறார். இவருக்கும் மைக்ரோசாஃப்டின் பில் கேட்ஸ¨க்கும் இடையிலான விவாதங்களும் தீர்வுகளும் ஆங்காங்கே தலைகாட்டியிருக்கிறது. இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் லியாண்டர் அமெரிக்காவின் பிரபலமான 'வயர்ட்.காம்' (Wired.com) என்கிற நிறுவனத்தின் செய்தி ஆசிரியர் என்பதால் ஸ்டீவ் பற்றிய அனைத்து அம்சங்களையும் வெளுத்து வாங்கியிருக்கிறார்.
இந்தப் புத்தகம் தொழில்முனைவோர்களுக்குத் தேவையான பல தொழில் யுக்திகளை புட்டுப் புட்டு வைக்கிறது. இந்த ஒரு காரணத்திற்காகவே இந்தப் புத்தகத்தை எல்லோரும் படிக்கவேண்டும். இதற்கு ஒரு சின்ன உதாரணம், ஸ்டீவ் மீண்டும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைவராக வந்தபிறகு அவர் எடுத்த முதல் நடவடிக்கை ஆப்பிள் நிறுவனம் சந்தைப்படுத்தி வந்த 40 பொருட் களை 4 பொருட்களாகக் குறைத்ததுதான்! 50, 60 பொருட்களை மானாவாரியாகத் தயார் செய்து விற்பதைவிட நம்மால் சிறப்பாகத் தயார் செய்து விற்க முடியக்கூடிய 5 பொருட்களை தயார் செய்தால் போதும் என்பதுதான் இதற்குக் காரணம்.
'புதிய பொருட்களை அல்லது கருவிகளை உருவாக்கி வடிவமைக்கும் திறமை, ஒரு பொருளைச் சந்தையில் அறிமுகப்படுத்த நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் அவர் அந்தப் பொருளை அறிமுகப்படுத்தும் விதம் (Product Presentations), அவருடைய ஒப்பந்தநோக்குடன் கூடிய கலந்துரையாடல் (Negotiation Skill or Skills in cutting deals). இந்த மூன்றிலும் இவரை மிஞ்ச ஆளில்லை' என்கிறார் ஆசிரியர். இதற்கு 'ஸ்டே ஃபூலிஷ், ஸ்டே ஹங்ரி' (Stay Foolish, Stay Hungry) என்கிற பெயரில் அவர் சான் பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையே சான்று.
இவ்வளவு பேரும், புகழும் பெற்ற ஸ்டீவ் ஒரு என்ஜினீயரோ அல்லது புரோகிராமரோ அல்லது நிர்வாகவியல் படித்தவரோ அல்ல. கல்லூரிப் படிப்பை பாதியில் விட்டவர். பொருட்கள் பற்றியும் தொழில் நுட்பம் பற்றியும் என்ஜினீயராக அல்லாமல் சாதாரண வாடிக்கையாளராக, உபயோகிப்பாளராக இருந்து சிந்திப்பவர். தனது நிறுவனப் பொருட்கள் மற்ற நிறுவனப் பொருட்களைவிட தரத்தில் உயர்ந்தே இருக்கவேண்டும் என்று கருதுபவர். இதனால், ஆப்பிள் நிறுவனப் பொருட்களின் விலையும் சற்றே தூக்கலாகத்தான் இருக்கும்.
இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ஸ்டீவை அறிந்த பலரிடம் அவரைப் பற்றி கருத்து கேட்டு எழுதி இருக்கிறார். அதுபோல ஸ்டீவையும் சந்தித்து அவருடைய கருத்துக்களையும், எண்ணங்களையும் வெளியிட்டிருந்தால் இப்புத்தகம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அட்லீஸ்ட், அவரிடமிருந்து ஒரு முன்னுரையாவது கேட்டு வாங்கிப் போட்டிருக்கலாம். ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் 'ஸ்டீவிட மிருந்து கற்றுக் கொள்ளவேண்டிய பாடங்கள்' என தொகுத்துக் கொடுத்திருப்பது இதன் சிறப்பு.

0 comments:

Post a Comment

Pages